உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரவு பணியில் துாக்கம்: 2 கேட் கீப்பர் சஸ்பெண்ட்

இரவு பணியில் துாக்கம்: 2 கேட் கீப்பர் சஸ்பெண்ட்

சென்னை:இரவு பணியின்போது துாங்கிய, 'கேட் கீப்பர்' இருவரை சஸ்பெண்ட் செய்து, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. கடலுார் மாவட்டம், செம்மங் குப்பத்தில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய சம்பவத்தில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம், அனைத்து மண்டல ரயில்வே அதிகாரிகளுடன், 'வீடியோ கான்பன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார்.அப்போது அவர், 'லெவல் கிராசிங் பகுதிகளில், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும். ரயில்வே லெவல் கிராசிங் பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். 'கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் பகுதிக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்வது அவசியம். 'இன்டர்லாக்கிங்' தொழில்நுட்பத்திற்கு மாற்றப்படாத லெவல் கிராசிங் கேட்டுகளை, தினமும் ஆய்வு செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.இதையடுத்து, லெவல் கிராசிங் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அரக்கோணம் - செங்கல்பட்டு தடத்தில், ரயில்வே அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தும்போது, திருமால்பூர் அருகில் உள்ள, 40 மற்றும் 44ம் எண் ரயில்வே கேட்டுகளில், இரவு பணியின்போது, இரண்டு கேட் கீப்பர்கள் துாங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கேட் கீப்பர்கள் காத்திகேயன், ஆஷிஸ்குமார் ஆகியோர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த இடங்களில் புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி