உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மோசடி வழக்கில் சிக்கியவர் நிகிதா

மோசடி வழக்கில் சிக்கியவர் நிகிதா

திருமங்கலம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் கொல்லப்பட்ட வழக்கில் புகார் அளித்த நிகிதா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.மதுரை மாவட்டம் திருமங்கலம், ஆலம்பட்டியை சேர்ந்தவர் ஜெயபெருமாள். மறைந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மகள் நிகிதா. இவர் 'முனைவர்' பட்டம் முடித்தவர். திண்டுக்கல் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் பேராசிரியையாக உள்ளார்.இவரது குடும்பத்தை சேர்ந்த ஒருவர், மற்றொருவருடன் கூட்டு சேர்ந்து திருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பலரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வசூலித்ததாகவும், அவர்களுக்கு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாகவும் ரூ. பல லட்சம் மோசடி வழக்கு திருமங்கலம் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் 10.5.2011ல் பதிவானது. இதில், ஜெயபெருமாள், தாய் சிவகாமி, அண்ணன் கவியரசு, நிகிதா உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தற்போது தாயார் சிவகாமியுடன் வசித்து வரும் நிகிதா, அம்மாவிற்கு ஸ்கேன் எடுப்பதற்காக சென்றுவிட்டு, மடப்புரம் கோயிலுக்கு சென்ற போது தான் நகை திருட்டு, அஜித்குமார் மரணம் நிகழ்ந்துள்ளது.இந்த வழக்கில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் நிகிதாவுக்கு உதவி செய்தார் என்ற தகவல் பரவியது. ஆனால் நீதிமன்றத்தில் அந்த தகவல் தவறானது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று நிகிதாவை தேடி பத்திரிகையாளர்கள் சென்றபோது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.நிகிதா தரப்பினர் கூறியதாவது: நகையைக் காணவில்லை என்றுதான் நிகிதா புகார் கொடுத்திருந்தார். காவலாளி அஜித்குமார் இறந்துவிட்டார் என போலீஸ் சொல்லித்தான் அவருக்கு தெரியும். தி.மு.க பின்புலம், ஐ.ஏ.எஸ் உறவினர் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதில் உண்மை இல்லை என்றனர்.போலீஸ் தரப்பில் கேட்டபோது, 'தலைமறைவாவதற்கு அவர் குற்றவாளி அல்ல. புகார்தாரர்தான்' என்றனர்.

மேலும் பல வழக்குகள்

நிகிதா, ஆலம்பட்டியில் உள்ள அவரது வீட்டை தனியார் கல்லுாரி நிர்வாக மேலாளர் பாசில் என்பவருக்கு ரூ.70 லட்சத்திற்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டு முதற்கட்டமாக ரூ.25 லட்சம் பெற்றுள்ளார். அதன் பின் கூடுதல் பணம் கேட்டதால் அந்த விற்பனை நின்றுபோயுள்ளது. இந்நிலையில், நிகிதா அந்த வீட்டை மதுரையில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.50 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார். ஆனால் பாசிலின் பணத்தை நிகிதா திரும்பி தரவில்லை.மேலும் இவரிடம் மதுரை செக்கானுாரணி அருகே உள்ள தேங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் அரசு வேலைக்காக ரூ.25 லட்சம் கொடுத்து ஏமாந்துள்ள வழக்கும் உள்ளது. இதே போல் திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் மேலும் இரண்டு வழக்குகள் நிகிதா மீது உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sekar ng
ஜூலை 03, 2025 15:04

திமுகவில் நிகித இருப்பதால் என்ன செய்தாலும் ஊடகம் காப்பாற்றும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 03, 2025 12:37

இனிமேல் எல்லாரும் நிகிதா என்பவர் எவ்வளவு மோசமானவர் என்பது பற்றி பிரச்சாரம் செய்யவேண்டியிருக்கும். அப்போதுதான் குன்றிய நாட்டு கழக காவலர் அணியினரால் அஜீத் கொல்லப்பட்டது மறக்கப்படும்


SVR
ஜூலை 03, 2025 10:38

கேச சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பது உண்மையா இல்லையா என்கிற ஐயம் எழுகிறது. ஒரு அப்பாவி காலம் ஆயிற்று.


R.RAMACHANDRAN
ஜூலை 03, 2025 09:50

காவல் துறையினர் லஞ்சத்தின் பேரில் குற்றவாளிகளை புகார்தாரராகவும் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாகவும் திரித்து உண்மை குற்றவாளிகளை அப்பாவிகள் என விடுவிப்பார். அவர்களுடன் சமாதானமாக செல்ல மறுக்கும் பாதிக்கப்பட்டவர்களை சித்ரவதை செய்து சிறைக்கு அனுப்பும் வேலையை செய்கின்றனர்.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2025 09:00

பேராசிரியை வேறு .......


Saai Sundharamurthy AVK
ஜூலை 03, 2025 08:46

அஜித்குமார் கொலை செய்யப்பட்டு விட்டார். ஏதேதோ காரணங்கள் சொல்லப் பட்டு விட்டன. அவருடைய தம்பிக்கு அரசு வேலையும், இழப்பீடும் வழங்கப்பட்டு விட்டது. இப்போது ஒரு புதிய நாடகத்தை திமுக அரசு தொடங்கி வைத்து, கொலை சம்பவத்தை பூசி, மெழுகி, மக்களை திசை திருப்புகிறது.


Kumar Kumzi
ஜூலை 03, 2025 08:33

துண்டுசீட்டு கூமுட்ட சித்தப்புவின் தில்லுமுல்லு மாடல் ஆட்சி சிரிப்பாய் சிரிக்கிறது


D Natarajan
ஜூலை 03, 2025 07:56

எல்லா நீதிபதிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்தியாவின் judiciary உலகத்திலேயே மோசமானது. 2011 ல் போட்ட கேஸ் இன்னும் முடியவில்லை. கேவலம்.


சசிக்குமார்
ஜூலை 03, 2025 07:45

பெரிய படிப்பு பெரிய இடம் அதனால் தனியாக கவனிக்க முடியாமல் அந்த அதிகாரியுடன் கூட்டு சேர்ந்து கவணித்துள்ளாராம். இதை எதிர்கோஸ்டி டக்ளஸ் குரூப் போட்டு கொடுத்து விட்டது. இப்போது அவர்களை காப்பாற்ற தனி வீடு பணம் அரசு வேலை என்று மறைக்க பாடுபடுராங்க


Rajasekar Jayaraman
ஜூலை 03, 2025 07:35

இது முழுக்க முழுக்க திராவிடம் மாடல் போல் உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை