உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்

யாருடனும் கூட்டணி இல்லை; சீமான் மீண்டும் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: ''யாருடனும் கூட்டணி இல்லை. நான் புலி. சுதந்திரமாக வேட்டையாடி நினைத்ததை சாதிப்பேன்,'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.மதுரையில் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: வக்ப் திருத்த மசோதா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறுவதும் அவர்களுக்கு ஆதரவாக மாறிவிடும். எதிர்நிலை வாக்கு தான். அதற்கு எதிராக இருக்கும். ஜி.கே.வாசன் எதற்கு அந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. அது தவறான முடிவு. நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று அவர்களும் சொல்லிவிட்டார்கள். நாங்களும் ரத்து செய்ய முடியாது என இவர்களும் சொல்லிவிட்டார்கள்.தேர்தல் வரும்போதுதான் நீட் தேர்வு பற்றி பேசுவார்களா? என்ன கொடுமை என்று பாருங்கள். இப்பொழுது இந்த தீர்மானத்தை போட்டு யாரிடம் கொண்டு செல்வார்கள். இதெல்லாம் வெற்று தீர்மானங்கள். இந்த நீட் தேர்வை முதலில் கொண்டு வந்தது யார்? முதலில் கொண்டு வந்தது காங்கிரசும், தி.மு.க.,வும் தான்.காங்கிரஸ் கொண்டு வந்தது அப்பொழுது கூட இருந்தது யார்? 'அன்னைக்கே அந்தப்பக்கம் 'நீட்'டுனு சொல்லாம, இந்தப்பக்கம் 'நீட்'டுனு சொன்னது யார்? நீட் தேர்வுக்கு ஆதரவாக கருணாநிதி கடிதம் எழுதி உள்ளார். தேர்தல் வரும்போது நீட் தேர்வுக்கு எதிரானது கச்சத்தீவுக்கு எதிரானது என தீர்மானம் போடுவார்கள். தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் கூட்டியது போல் எதற்கு நீட் தேர்வுக்கு எதிராக கூட்டவில்லை என நான் அன்று கேட்டேன். அதற்காக இப்பொழுது அனைத்து கட்சி கூட்டம் நடத்துகிறார்கள்.கூட்டணி எஜமானர்களுக்கு அடிபணிந்து சீட்டு கேட்பது எங்களுக்கு வேண்டாம். கூட்டணியில் எலியாக இருப்பதை விட சிங்கமாய் தனித்து இருந்து கர்ஜித்து செத்து போவது மேல். நான் சிங்கமும் இல்லை. யாருடனும் கூட்டணி இல்லை. நான் புலி. சுதந்திரமாக வேட்டையாடி நினைத்ததை சாதிப்பேன். இவ்வாறு சீமான் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

vadivelu
ஏப் 05, 2025 01:05

நினைப்பது தி மு க ஆட்சியை வீழ்த்துவது. அது இவர் தனியாக நிற்பதால் நிறை வேறும்.


தாமரை மலர்கிறது
ஏப் 04, 2025 23:21

பிஜேபி கொள்கைகளை அப்படியே காப்பியடித்து, ஸ்டாலினை எதிர்த்து பேசி, பிஜேபிக்கு வரும் ஸ்டாலின் எதிர்ப்பு ஓட்டுக்களை சிதறடித்து, ஸ்டாலினை ஜெயிக்க வைப்பது தான் சைமனின் திட்டம்.


raghavan
ஏப் 04, 2025 22:47

திமுக வை வாழ வைக்கும் விவேகமற்ற வெட்டி வீரம்.


R.MURALIKRISHNAN
ஏப் 04, 2025 20:14

சினிமாவிலும் ஜோக்கர் தனி டிராக்கில் வருவார்


ராமகிருஷ்ணன்
ஏப் 04, 2025 18:11

அப்பாடா எல்லோருக்கும் நிம்மதி. மாறி தொலையாதே. நீ தனியா வேட்டையாடு முயல், பெருச்சாளி கிடைக்கும்.


vijai hindu
ஏப் 04, 2025 18:07

டெபாசிட் கிடைக்காது புலி


SUBBU,MADURAI
ஏப் 04, 2025 17:45

இவர் திமுகவின் B டீம் இவர் தனியாக நின்று திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்களை பிரித்து திமுக ஜெயிக்க உதவுவாரே தவிர வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டார். இவரை நம்பி வரும் தம்பிகளை நடுத்தெருவில் நிறுத்தி விடுவார். எனவே திமுகவை தவிர இவரால் வேறு யாருக்கும் பிரயோஜனமும் இல்லை. இவரைப் போன்றே திமுகவினால் அரசியல் களத்தில் இறக்கி விடப்பட்டவர் தான் நடிகர் ஜோசப் விஜய்...


raja
ஏப் 04, 2025 17:23

கதவை திற காற்றாவது வரட்டும்.


மணி
ஏப் 04, 2025 17:01

வேட்பாளருக்கு நீங்க செலவு பண்ணி இத சொன்ன சரி எவரையோ மொட்டையடிச்சு நீங்க கெத்து காட்டறது ?உங்களை நம்பி நிக்கறவங்க இருக்கும் வரை உங்களுக்கு லாபம்


மூர்க்கன்
ஏப் 04, 2025 16:59

இந்த பா . குற்றவாளி, கள் குடிவெறி கோமாளியை எவன் கூப்டான் ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை