உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வழிப்பறி வழக்கில் கைதான எஸ்.ஐ.,களுக்கு ஜாமின் இல்லை

வழிப்பறி வழக்கில் கைதான எஸ்.ஐ.,களுக்கு ஜாமின் இல்லை

சென்னை:வழிப்பறி வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ.,க்களின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியில், கடந்தாண்டு டிச., 15ம் தேதி தனியார் நிறுவன ஊழியர் முகமது கவுஸ் என்பவரிடம், 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர்கள் ராஜா சிங், சன்னி லாய்டு, வருமான வரித் துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இந்த வழக்கில், சன்னி லாய்டு தவிர மற்ற நான்கு பேருக்கும் உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. தொடர் விசாரணையில், ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் இருந்தும், இந்த கும்பல் 20 லட்சம் வழிப்பறி செய்தது தெரியவந்தது.இதையடுத்து, இந்த வழக்கிலும் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைதான வருமான வரி அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகியோரின் ஜாமின் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், ராஜா சிங், சன்னி லாய்டு ஆகியோர் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு, நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதி, சப்- - இன்ஸ்பெக்டர்கள் 2 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ