உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் பாதைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு இல்லை; சேலம் கலெக்டர் ஆபீஸ் ஜப்தி

ரயில் பாதைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு இல்லை; சேலம் கலெக்டர் ஆபீஸ் ஜப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: சேலம் - கரூர் அகல ரயில் பாதை திட்டத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்காததால், கோர்ட் உத்தரவுப்படி, சேலம் கலெக்டர் ஆபிஸ் ஜப்தி செய்யப்பட்டது. சேலம் - கரூர் அகல ரயில் பாதை திட்டம் கடந்த 20 ஆண்டுக்கு முன் கொண்டு வரப்பட்டது. ரயில் பாதை அமைப்பதற்காக சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இது நடந்து 22 ஆண்டுகளாகியும் தற்போது வரை நிலம் கொடுத்த அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இழப்பீடு கிடைக்காதவர்கள், உரிய இழப்பீட்டை பெற்றுத் தருமாறு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட், இழப்பீட்டை வழங்குமாறு சேலம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், கோர்ட் உத்தரவிட்டும், இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்த கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி இன்று காலை சேலம் கலெக்டர் ஆபிஸில் உள்ள வருவாய்த்துறை அலுவலகத்தை கோர்ட் அமினாக்கள் ஜப்தி செய்தனர். அங்கிருந்த தளவாடப் பொருட்கள் அனைத்திற்கும் சீல் வைத்தனர். சேலம் கலெக்டர் ஆபிஸில் வழக்கம் போல அலுவல் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, திடீரென மேற்கொள்ளப்பட்ட இந்த ஜப்தி நடவடிக்கையால், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

r ravichandran
டிச 12, 2024 21:09

இரயில்வே துறை கொடுத்த இழப்பீட்டு தொகையை, நிலத்தை கையகப்படுத்தி கொடுத்த மாநில அரசு அந்த தொகையை என்ன செய்தது என்று தெரியவில்லை. ஏப்பம் விட்டு விட்டதாக தெரிகிறது. அதனால் தான் மாநில அரசின் சொத்து ஜப்திக்கு வந்து விட்டது.


சாண்டில்யன்
டிச 13, 2024 01:00

ரயில்வேத்துறையிலிருந்து பணத்தை வாங்கி தமிழக அரசிடம் கொடுத்தது நீர்தானா? அதெப்படி மாநில அரசுதான் ஏப்பம் போட்டுவிட்டதாக எங்கே தெரிந்தது? எப்படி தீர்மானமாக சொல்லலாம் இருபது ஆண்டுகளுக்குமுன் நிலம் கையாகப் படுத்தியதாக சொல்லியிருக்கிறது 2001 - 2005 இல் ஜெயா சிறை சென்று திரும்ப அந்த ஆண்ட காலம்


Sheik Peer
டிச 13, 2024 07:38

ஏன் ஜெயா அம்மையாரை இங்கு பேச வேண்டும் இதிலிருந்து நீ எவ்வளவு பெரிய அயோக்யன் என்பது தெரிகிறது


சாண்டில்யன்
டிச 13, 2024 21:30

இப்போது சனாதன இந்துக்கள் ஒளிந்துகொள்ள தேர்வு செய்வது தங்கள் பங்காளி மூர்கன்ஸ்கள் பெயர்களே தவிர வேறில்லை


selva
டிச 12, 2024 17:47

கலெக்டர் ஆபீஸ் மக்கள் சொத்து அதை எப்படி ஜப்தி பண்ண முடியும் அதிகரிகளின் சொத்தை ஜப்தி செய்யவேண்டும் அரசாங்க அதிகாரி வேலை செய்வதை தடுத்தார் என்று கிரிமினல் கேஸ் போடறாங்க அதேபோல் அதிகாரி சம்பளம் வாஙகி கொண்டு வேலை செய்யவில்லை என்றாலும் கிரிமினல் கேஸ் போட்டு உள்ளே போட வேண்டும்


orange தமிழன்
டிச 12, 2024 17:40

கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்தால் என்ன கிடைக்கும்....அந்த மாவட்ட மந்திரி, எம்எல்ஏக்களிடம் ஜப்தி செய்தால் ஒரே நாளில் வசூல் ஆகியிருக்கும்....


அப்பாவி
டிச 12, 2024 17:16

கெலக்டர் வீட்டை ஜப்தி பண்னனும். அப்பவும் குடுக்கலேன்னா சேலம் ரயில் நிலையத்தை ஜப்தி பண்ணுங்க. ரயில் போக்குவரத்து நின்னா ரயில் அமைச்சரே எறங்கி வருவாரு.


தமிழ்வேள்
டிச 12, 2024 20:28

நில ஆர்ஜிதம் செய்து தருவது மாநில அரசு மட்டுமே.நிலத்தின் மதிப்பு மாநில அரசின் கஜானா வுக்கு மொத்தமாக மாற்றம் செய்யப்படும்.இதுதான் அரசு நெறிமுறை.. ஆனால் மாநில அரசு அந்த பணத்தை மடைமாற்றம் செய்து விடுவதுதான் இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கு காரணம்..


சாண்டில்யன்
டிச 13, 2024 01:05

தமிழ்வேள் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு ஸ்ரீபெரும்புதூரில் 300 கோடி நிலம் "கையகப் படுத்தப்பட்ட" வழக்கு உயர்நீதிமன்றத்தில் சிரிப்பாய் சிரித்த கதை தெரியாதா?


சாண்டில்யன்
டிச 13, 2024 01:05

தமிழவேள் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு ஸ்ரீபெரும்புதூரில் 300 கோடி நிலம் "கையகப் படுத்தப்பட்ட" வழக்கு உயர்நீதிமன்றத்தில் சிரிப்பாய் சிரித்த கதை தெரியாதா?


Bhaskaran
டிச 12, 2024 16:53

மீண்டும் அலுவலகம் திறக்கும் வரை கிளார்க் குகளுக்கு ஜாலி .ஆனால் அந்த நாட்களில் லஞ்சம் வாங்கமுடியாது


Kannan cs
டிச 12, 2024 16:38

ரயில் பாதைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடுத் தொகை ஏதும் வழங்கப்படவில்லையா? அரசு தரப்பில் ஏன் நீங்கள் இதை பற்றி கேட்கவில்லையா?


Suppan
டிச 12, 2024 15:49

நிலம் கொடுத்தவங்க இது திராவிடக்கட்சிகளின் அதுவும் திராவிட மாடல் ஆட்சி என்று புரிந்து கொள்ளாமல் சரியா "கவனிக்க மறந்துட்டாங்களோ "


Kannan cs
டிச 12, 2024 15:46

. இந்த வழக்கில் அரசு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்கவே இல்லையா? இது நாள் வரை எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட்டது? அவர்கள் அளித்த நிலத்தின் மதிப்பு என்ன? இவற்றை ஏன் இந்த செய்தியில் போடவில்லை


Gopalan
டிச 12, 2024 14:23

கோர்ட் ஜப்தி செய்தாலும் 22 வருடமாக ஆண்டு வந்த அனைத்து கலெக்டர்களை கைது செய்ய வேண்டும்.


Kannan cs
டிச 12, 2024 15:43

எதையும் தெரியாமல் பேசுவது வழக்கின் முழு நிலை பற்றி யாரும் தெரிந்து கொள்வதில்லை. அந்த வழக்கின் 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வழக்குகள் முடிக்கப்பட்டது. சிலர் தங்களது ஆதாயத்திற்காக வேண்டுமென்றே வழக்கினை நடத்தி வருகின்றனர்கள்


Gopalan
டிச 12, 2024 14:23

கோர்ட் ஜப்தி செய்தாலும் 22 வருடமாக ஆண்டு வந்த அனைத்து கலெக்டர்களை கைது செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை