உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீட் கேட்காததால் ஏமாற்றம் இல்லை

சீட் கேட்காததால் ஏமாற்றம் இல்லை

தமிழக காங்., சார்பில், தி.மு.க.,விடம் ராஜ்யசபா 'சீட்' கேட்கவில்லை; அதனால், எங்களுக்கு ஏமாற்றம் இல்லை. திருக்குறளில் ஆன்மிக கருத்து இருப்பதை ஏற்றுக் கொள்கிறேன். பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை காலத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் கட்சி வளர்ந்த தாக மாயையை மட்டுமே ஏற்படுத்தினர். பா.ஜ.,விற்கு ஒரு ஓட்டு சதவீதம் தான் உள்ளது. பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததை அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர் கூட விரும்பவில்லை. பஹல்காமில் ஹிந்துக்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த விஷயத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறோம். தமிழகத்தில் காங்.,க்கு எந்த தொகுதியை கொடுத்தாலும் வலுவான வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெறுவோம். மாநில அளவில் டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மை. தமிழகத்தில், தேர்தலின்போது பணப்புழக்கம் அதிகரிப்பது வழக்கம்தான். கார்த்தி காங்., - எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Oviya vijay
மே 31, 2025 09:16

அப்பன் மகா யோக்கியன். மகன் பறம யோக்கியன். சொம்பை எடுத்து உள்ளே வை


Ravichandran Arumugam
மே 31, 2025 07:39

வைத்தியம் மாதிரி உளறுகிறார்.காங்கிரஸ் ஓட்டு அதிகபட்சமாக 3 சதவீகிதம்தான் இருக்கிறது.தனித்து நின்று பாலத்தைக் காட்ட வேண்டியதுதானே.பயந்தாங்கொள்ளிகள்.பி.ஜே.பி.க்கு 10 சதவீத ஓட்டுக்கள் இருக்கும்.


புதிய வீடியோ