மேலும் செய்திகள்
பொங்கல் போனஸ் அறிவிப்பு
03-Jan-2025
சென்னை : 'இதுவரை, 34,000 ஓய்வூதியதாரர்கள், தங்களின் வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்கவில்லை; அவர்களின் ஓய்வூதியம் இம்மாதம் முதல் நிறுத்தப்படும்' என, தமிழக மின் வாரியம் தெரிவித்துள்ளது.தமிழக மின் வாரியத்தில் பல்வேறு பதவிகளில் பணிபுரிந்த, 92,000 ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்கள் ஆண்டுதோறும் தங்கள் வாழ்நாள் சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.இதன்படி, ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்., வரை, வங்கிகள், மொபைல் போன் செயலி போன்றவற்றின் வாயிலாக சமர்ப்பிக்கலாம். 58,000 ஓய்வூதியதாரர்கள், 2024க்கான வாழ்நாள் சான்றை சமர்ப்பித்துள்ளனர்; 34,000 பேர் சமர்ப்பிக்கவில்லை. இவர்களுக்கான ஓய்வூதியம் இம்மாதம் முதல் நிறுத்தப்படும் என்று, மின் வாரியம் தெரிவித்துள்ளது.
03-Jan-2025