உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / " குறைகள் சரிசெய்யப்படும்" - உதயநிதி பிரசாரம்

" குறைகள் சரிசெய்யப்படும்" - உதயநிதி பிரசாரம்

திருசெந்தூர்: 'எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தாலும், முதல்வர் ஸ்டாலின் சொன்னதைச் செய்கிறார்' என அமைச்சர் உதயநிதி கூறினார்.தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, தேர்தல் பிரசாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: கவர்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. சட்டசபைக்கு கவர்னர் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. மகளிர் இலவச பேருந்து திட்டத்தை அதிகம் பெண்கள் பயன்படுத்தியுள்ளனர். அரசு கொண்டு வரும் ஒரு திட்டத்தை மக்கள் பயன்படுத்தினால் அது அந்த அரசுக்கு கிடைத்த வெற்றி.

காலை உணவு திட்டம்

முதல்வரின் காலை உணவு திட்டத்தை இந்தியாவில் தமிழகம் தான் முதன்மையாக செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தில் தினமும் 18 லட்சம் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுகின்றனர். மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் சில இடங்களில் குறைகள் உள்ளது. நான் இல்லை என்று சொல்லவில்லை. அது சரி செய்யப்பட்டு நான்கு ஐந்து மாதத்தில் தகுதியுள்ள அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும்.

அதிக ஓட்டு வித்தியாசம்

வெள்ள நிவாரண நிதிக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. கனிமொழியை நிச்சயமாக நீங்க ஜெயிக்க வைத்து விடுவீர்கள் அதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. தூத்துக்குடியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இங்கு கருணாநிதி தான் வேட்பாளர். கருணாநிதியின் மறு உருவமாக கனிமொழி எம்பி இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

sundar
ஏப் 14, 2024 09:29

Rather than public faces , we could see only party and alliance cadres in his meeting


Keshavan.J
ஏப் 14, 2024 08:38

So he agrees they didnt fulfil the election manifesto


sureshpramanathan
ஏப் 14, 2024 05:06

Thiruttu DMK looting is the only thing your grandfather taught to your father and your family So much is stolen why are you guys still talking as if you are budhha We want to put all of you in jail And confistigate all looted money and give it back to Tamilnadu people


M.S.Jayagopal
ஏப் 13, 2024 19:51

நீங்கள் செய்துவரும் பல மக்கள் நல திட்டங்கள், மக்களை ஏமாற்றி ஒட்டு வாங்குவதற்காகவே செய்யப்படுகின்றன மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், நீங்கள் இந்த அளவிற்கு ஊழல் செய்ய்யமாட்டீர்கள்நிதி நெருக்கடி நீங்கள் ஊழல் செய்வதால்தான் ஏற்பட்டுள்ளது ஊழல் செய்வது சமூகஅநீதி என்றாவது உங்களுக்கு தெரியுமா?


M.S.Jayagopal
ஏப் 13, 2024 19:51

நீங்கள் செய்துவரும் பல மக்கள் நல திட்டங்கள், மக்களை ஏமாற்றி ஒட்டு வாங்குவதற்காகவே செய்யப்படுகிறன்றன மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால், நீங்கள் இந்த அளவிற்கு ஊழல் செய்ய்யமாட்டீர்கள்நிதி நெருக்கடி நீங்கள் ஊழல் செய்வதால்தான் ஏற்பட்டுள்ளது ஊழல் செய்வது சமூகஅநீதி என்றாவது உங்களுக்கு தெரியுமா?


spr
ஏப் 13, 2024 18:23

"செய்த தில்லுமுல்லு, கொள்ளையடித்தவிதம் இவற்றில் சிறு சிறு குறைகள் இருந்ததால்தான் மாட்டிக் கொள்வோம் போல் தெரிகிறது அதனையும் சரிசெய்து வரும் காலத்தில் முழுமையாகக் கொள்ளையடிக்க மற்றுமொரு வாய்ப்பு தாருங்கள்" என்று மறைமுகமாகச் சொல்கிறாரோ


PARTHASARATHI J S
ஏப் 13, 2024 17:01

ஊழல் செய்வதாலேயெ நிதி நெருக்கடி வருகின்றது.


HoneyBee
ஏப் 13, 2024 16:30

மாறாத வரை உங்கள் ராஜ்யம் தொடரும்


theruvasagan
ஏப் 13, 2024 16:28

சில இடங்களில்தான் குறை உள்ளதா. அப்ப எந்த கொம்பனாலேயும் குறை சொல்ல முடியாத ஆட்சி எங்க நடக்குது. செவ்வாய் கிரகத்துலயா.


veeramani hariharan
ஏப் 13, 2024 15:57

Where these people kept this much corrupt money Also see how they are foolishing the public


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ