உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேகதாது அணையை கட்ட எந்த கொம்பனாலும் முடியாது

மேகதாது அணையை கட்ட எந்த கொம்பனாலும் முடியாது

சட்டசபையில் நேற்று, நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தண்ணீரை பெறும் உரிமை, தமிழகத்திற்கு இருக்கிறது. ஆனாலும், அந்த உரிமை மறுக்கப்படுகிறது. அண்டை மாநில முதல்வர்களுடன் இருக்கும் நல்லுறவை பயன்படுத்தி, நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணலாமே என்று, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேட்டார்.பேசினால் காரியம் கெட்டு விடும். பேசிப்பேசி பார்த்து தான், இனி பேசுவதால் பலனில்லை என்று முடிவுக்கு வந்தோம். அதனால் தான் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். நதிநீர் பிரச்னை பற்றி பேச்சு நடத்தினால், 'நீங்களே பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்' என, உச்ச நீதிமன்றம் கூறிவிடும்.நம் அண்டை மாநிலங்களில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் நடந்தவற்றை அறிவோம். அதனால் தான் மிகவும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.உச்ச நீதிமன்றத்தில் காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளுக்காக, 22 வழக்குகள் தொடுத்துள்ளோம். இதற்காக எவ்வளவு கோடி ரூபாய் செலவாகும் என்பதை, அனைவரும் அறிவோம்.கருணாநிதி முதல்வராக இருந்த போது துவங்கப்பட்ட காவிரி -- வைகை -- குண்டாறு இணைப்புத் திட்டத்தை, அ.தி.மு.க., அரசு செயல்படுத்தவில்லை. மத்திய அரசு நிதி அல்லது வெளிநாட்டு கடனையோ பெற்று, இத்திட்டத்தை அடுத்த ஆண்டு செயல்படுத்துவோம்.காவிரி மேலாண்மை வாரியம், 26 முறையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழு, 68 முறையும் கூடியுள்ளது. தமிழகத்தின் நிலை பற்றி, இந்த கூட்டங்களில் விளக்கமாக கூறியுள்ளோம். மேகதாது அணை கட்டுவது சுலபமல்ல. முதலில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும்.அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதன்பின், மத்திய சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட மத்திய அரசின் துறைகள், தீர்ப்பாயத்தின் அனுமதி பெற வேண்டும். இறுதியில் தமிழகத்தின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, மேகதாது அணையை கட்ட முடியும். எனவே, எந்த கொம்பனாலும் மேகதாது அணையை கட்ட முடியாது.இவ்வாறு துரைமுருகன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

அப்பாவி
மார் 25, 2025 11:03

வெட்டிப்.பேச்சு பேச இவரை யாரும் மிஞ்ச முடியாது..


SP
மார் 25, 2025 09:22

இதைத்தானே அப்பொழுது இருந்து தமிழக பாஜக சொல்லி வருகிறது இப்பொழுது நீங்கள் புதிதாக சொல்வது போல். இது எது மாதிரி அரசியல் என்றே புரியவில்லை


V Venkatachalam
மார் 25, 2025 08:48

அதுக்கும் தான் கொம்பன்னு நினைப்பு..


Balasubramanian
மார் 25, 2025 05:29

இனிமேல் மேக தாட்டு என்று குறிப்பிடுங்கள்! அது மேக - ஆடு தாட்டு- தாண்டிய இடம் ஆதலால் கன்னடத்தில் அவ்வாறு குறிப்பிடுகின்றனர். புலி துரத்திய போது ஆடு தாண்டி தப்பித்த இடம் ஆதலால் இந்த பெயர் வந்தது என்று அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சனை ஆடு புலி ஆட்டம் போல் தாண்டி போய் கொண்டே இருப்பதாலும் அவ்வாறு குறிப்பிடுவது உத்தமம்.


நிக்கோல்தாம்சன்
மார் 25, 2025 04:58

கச்சத்தீவு , மெரினா கடற்கரை ஏர்கூலர் மழைவிட்டும் தூவானம் விடவில்லை போன்ற வார்த்தைகளை தமிழர்கள் மறந்து விட்டார்கள் , அது போன்றதொரு வார்த்தைகள் 2027 ஆம் ஆண்டு வெளிவரும்


Srinivasan Narasimhan
மார் 25, 2025 04:20

ப்ரோ கர்நாடக துணை முதல்வர் இங்க இருந்தப்ப இந்த வாய் எங்கே போச்சு


Kasimani Baskaran
மார் 25, 2025 03:47

ஆனால் திராவிட கொம்பர்களிடம் ஒரு டாவணி கட்டணம் செலுத்தி விட்டால் அதன் பின்னர் வாயை மூடி சம்மதம் தெரிவித்து விடுவார்கள்.


karupanasamy
மார் 25, 2025 03:03

கர்நாடக து மு இங்கு இருக்கும்போது இதை ஏன் சொல்லவில்லை?


Kumar Kumzi
மார் 25, 2025 02:38

இப்பிடியே நீ கனவு கண்டுட்டு இரு நாளைக்கு நீ உயிரோட எழும்புனால் தான் அமைச்சர் இல்லை என்றால் பால் ஊற்றி பாடையில் ஏற்றிவிடுவார்கள்


Shankar
மார் 25, 2025 01:45

ரெண்டு நாளைக்கு முன்னாடி கர்நாடக மாநில துணைமுதல்வர் அதுவும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் டி.சிவகுமார் தமிழகத்திற்கு வந்திருந்தார். அவர் முன்னாடி இதுபோல சொல்லியிருக்கலாமே. அந்த நேரத்துல உங்க வாயை வாடகைக்கு விட்டிருந்தர்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை