உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / என்னைப்பற்றி வதந்தி பரப்பும் திருமாவளவன்: ஜெயக்குமார் ஆவேசம்

என்னைப்பற்றி வதந்தி பரப்பும் திருமாவளவன்: ஜெயக்குமார் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பதவி என்பது தோளில் போட்ட துண்டு என்றார் அண்ணா. ஆனால், என்னை பொறுத்தவரையில் ஒரு கர்ச்சீப் தான்' என்று அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக வெளியான தகவல் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; ஆண்டாண்டு காலமாக சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு பிறந்த நிலையில், அந்த வரலாற்றை மாற்றி எழுத வேண்டும், அதன்மூலம் வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே, கருணாநிதி ஆட்சியின் போது தமிழ் புத்தாண்டு தினத்தை தை மாதத்தில் கொண்டாட ஆணை பிறப்பிக்கப்பட்டது. மரபையும், பண்பாட்டையும் தி.மு.க., காற்றில் பறக்கவிட்ட நிலையில், அது கூடாது என்பதற்காகவே, சித்திரையிலேயே தமிழ் புத்தாண்டு கொண்டாட ஜெயலலிதா அரசாணை பிறப்பித்தார். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைந்தால் நான் கட்சியில் இருந்து விலகுவதாக திருமாவளவன் கூறினார். அது வதந்தி. நினைத்துக் கூட பார்க்க முடியாத இந்த செய்தியை பரப்பி வருகின்றனர். இந்த செய்திகளினால் யூடியூப் சேனல்களுக்கு வருமானம் கிடைத்ததில் மகிழ்ச்சி. எங்களின் குடும்பம் 75 ஆண்டு காலம் திராவிட பாரம்பரியம் கொண்டது. தன்மானத்துடன் வளர்ந்த குடும்பம். பதவிக்காக யாருடைய வீட்டு வாசலிலும் நின்றதில்லை. எங்களின் குடும்பத்தை அ.தி.மு.க., அடையாளம் காட்டியது. அந்தஸ்தை கொடுத்தது. என்னை அடையாளம் காட்டியது, அ.தி.மு.க.,வும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவும் தான். பதவிக்காக ஜெயக்குமார் யார் வீட்டு வாசலிலும் நின்றதில்லை. பதவி என்பது தோளில் போட்ட துண்டு என்றார் அண்ணா. ஆனால், என்னை பொறுத்தவரையில் ஒரு கர்ச்சீப் தான். அ.தி.மு.க., தான் என்னுடைய உயிர்மூச்சு.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Bala
ஏப் 14, 2025 21:43

இப்படித்தான் திராவிட மாடல் கேடி கும்பல்கள் அதிமுக பாஜக கூட்டணியை உடைப்பதற்காக எல்லாவிதமான குள்ளநரித்தனத்தையும் சதிச்செயலையும் கையாளும் எட்டப்பர்கள். திரு ஜெயக்குமார் அவர்களும் அதிமுகவினரும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு ஒரே குறிக்கோள் திமுகவை 2026 தேர்தலில் ஆட்சியை விட்டு அகற்றுவது மட்டும்தான். வாழ்த்துக்கள் திரு ஜெயக்குமார் அவர்களே


TRE
ஏப் 14, 2025 17:20

Jk ஆவேசம்


Sampath Kumar
ஏப் 14, 2025 15:45

சொட்டை தலையில் என்ன வைத்தாலும் நிற்காது அது போலத்தான் உன் பதவியும் பவிசும் ...


Kadaparai Mani
ஏப் 14, 2025 14:37

திமுக மீடியா மாபியா தினமும் ஒரு கதை கட்டும். திமுக குடும்பம் பயத்தில் இருக்கிறது. அது தோல்வி பயம் மட்டும் அல்ல. ஆறு மாதத்தில் மிகப்பெரிய நடவடிக்கை ஊழல் பற்றி மத்திய அரசாங்கம் எடுக்க போகிறது. யூடூப் ஆட்களை கூட பணம் கொடுத்து வாங்கி உள்ளார்கள். இந்த முறை அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது


Infomation Technology Officers ASSOCIATION Tamilnadu Municipal Dept
ஏப் 14, 2025 13:26

நீ தானே கூறினாய் இதில் எங்கே திருமா வருகிறார் ஊடகங்களை பொறுத்தவரை அஇஅதிமுக திமுக நல்லது செய்தாலும் அஇஅதிமுக தான் செய்தது அதே சமயத்தில் அஇஅதிமுக நிறைய தவறுகளை செய்தாலும் அது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தான் செய்தன வாட் எ காமெடி


Nava
ஏப் 14, 2025 14:45

கட்டு மரத்தின் அருந்தவ புதல்வி கனிமொழியும் மாடல் அரசின் முதல்வர் சூடாலினும் தேர்தல் நேரத்தில் கூவியவைகளை நீங்கள் கொஞ்சம் நினைவு கூர்ந்து கொள்ளுங்கள்


ராமகிருஷ்ணன்
ஏப் 14, 2025 13:05

வார்த்தை வேகம் போதவில்லை, இன்னும் அதிகமாக, கேவலமாக பேசி சண்டை போட்டு கொண்டால் தான் மக்கள் கவனிப்பார்கள்,


chinnamanibalan
ஏப் 14, 2025 12:43

அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வயிற்றில் புளியை கரைத்து உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் போன்று இரண்டு கட்சிகளும் கூட்டணி இல்லாமல் தனித்தனியாக நிற்பார்கள். 200 தொகுதிகளை எளிதாக வெல்லலாம் என்று மனக்கோட்டை கட்டியவர்களுக்கு சற்று அதிர்ச்சிதான். எனவே அதிமுக பாஜக கூட்டணி குறித்து, திமுக கூட்டணி அவதூறுகள், வதந்திகளை தாராளமாக பரப்பவே செய்யும்.


சாணக்கியன்
ஏப் 14, 2025 13:35

முற்றிலும் உண்மை. குழப்பத்தை ஏற்படுத்த எந்த அளவிற்கும் செல்வார்கள். தேர்தல் வரை சமாளிக்க வேண்டும்.


Rajarajan
ஏப் 14, 2025 12:37

வெண்ணை திரளும்போது, தாழியை உடைக்கப்பார்க்கும் தி.மு.க. வின் சதி செயல் இதுபோல இன்னும் நிறைய நடக்கும். உங்களுக்கு திருப்பி பதிலடி கொடுக்க தெரியாதா ?? நச்சுப்பாம்புகள், கட்டுவிரியன், நயவஞ்சகர்கள் என்று தி.மு.க. வை, திருமா வசைபாடியதை திருப்பி ஒளிபரப்புங்கள்.


கனிஷ்கா ஜோதிட நிலையம் கனிஷ்கா திருமண தகவல் மையம்
ஏப் 14, 2025 12:34

அதிமுக பிஜேபி கூட்டணி வெற்றி பெற வாழ்த்துகிறோம்


Vasan
ஏப் 14, 2025 12:23

ஜெயக்குமார் சார், please file defamation case against those who spread rumour about you.


சமீபத்திய செய்தி