உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை

சிறுமி முதல் மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பில்லை

'தமிழகத்தை மீட்டெடுப்போம்; திராவிட மாடலுக்கு விடை கொடுப்போம்' என்ற என் பயணத்தை, தமிழக பெண்கள் ஏற்றுக்கொள்வர். மகளை பள்ளிக்கு அனுப்பினால் பத்திரமாக வீடு திரும்புவாரா என்ற பயத்தில் தான் பெற்றோர் உள்ளனர். நான்கு வயது குழந்தை முதல், 80 வயது மூதாட்டி வரை பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப் போடும், உரிமையோடும், சுதந்திரத்தோடும் வாழ வேண்டும். அதெல்லாம் கிடைக்க வேண்டும் என்றால், ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். அதற்கு, தமிழக பெண்கள் வைராக்கியமாக இருந்து, தி.மு.க.,வுக்கு ஓட்டு போடக் கூடாது. எக்காரணம் கொண்டும், கடந்த தேர்தலில் செய்த தவறை மீண்டும் செய்து விடாதீர்கள். தமிழகத்தில் நியாயமான, தர்மமான ஆட்சி அமைய, பா.ம.க., பாடுபடும். - அன்புமணி, தலைவர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !