உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாரும் என்னை பார்க்க வராதீங்க; மகன் பதவி பறிப்பு விவகாரத்தில் ராமதாஸ் உறுதி

யாரும் என்னை பார்க்க வராதீங்க; மகன் பதவி பறிப்பு விவகாரத்தில் ராமதாஸ் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''பா.ம.க தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்' என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின், ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. நேற்று முன்தினம் அன்புமணியை, பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிய ராமதாஸ், 'இனி நானே தலைவர்' என அறிவித்தார். அத்துடன், 'அன்புமணி செயல் தலைவராக செயல்படுவார்' என்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=folyattr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது பா.ம.க.,வினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து, அன்புமணி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும், ராமதாசுக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்த, திண்டிவனத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிலும், பனையூரில் உள்ள அன்புமணி வீட்டிலும், குடும்பத்தினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், ''பா.ம.க தலைவர் நீக்கம் தொடர்பாக யாரும் என்னை பார்க்க வர வேண்டாம்' என ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அன்புமணியின் தலைவர் பதவியை பறித்தது தொடர்பாக, கடந்த இரு தினங்களாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ராமதாஸை சந்தித்து சமரசம் செய்ய முயற்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sankaranarayanan
ஏப் 12, 2025 17:36

தைலாபுரத்தில் இனி எந்த தைலமும் கிடைக்காதாம் அப்பா தைலம் பேராண்டி பெயருக்கு மாற்றியாகிவிட்டது பேராண்டி தைலம் இனி விற்பனைக்கு வருவதற்கு சந்தர்ப்பமே இல்லை புள்ளையாண்டான் தைலம் மக்களின் விருப்பம் அதுதான் நன்றாக இப்போது விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது


Ray
ஏப் 12, 2025 17:30

அமீத் ஷா வுக்குமா தாழ்ப்பாள்?


M. PALANIAPPAN, KERALA
ஏப் 12, 2025 15:30

நாடகம் நன்றாக நடக்கட்டும்


தத்வமசி
ஏப் 12, 2025 13:39

அப்பா தலைவரு, பிள்ளை செயல் தலைவரு, இதில் என்ன செய்தி ? பெட்டியும் சாவியும் இடம் மாறி உள்ளது. அம்புட்டுத்தேன்... கட்சியை விட்டு நீக்கிவிட்டது போல செய்தி வந்த மாதிரி பேசுறாங்க.


R S BALA
ஏப் 12, 2025 13:39

இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு..


Bhaskaran
ஏப் 12, 2025 12:31

பெரிய ஸ்வீட் box குடுத்துட்டால் சரியாகிவிடுவார்


M Kannan
ஏப் 12, 2025 12:22

ஜாதி கட்சி நாராயணன் நாடகம் .


பிரேம்ஜி
ஏப் 12, 2025 12:11

தலைவர், செயல் தலைவர் இரண்டும் ஒன்றே! ஏதும் செய்யாமல் இருக்க எந்த பெயரில் இருந்தால் என்ன?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை