உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதியில்லை

500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதியில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு மருத்துவ கல்லுாரிகளில், 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 36 அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரிகளில், 5,200 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. அதில், 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.மேலும், சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில், 3,450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலையில், 550 இடங்களும் உள்ளன. இதன்படி, அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், 9,200 எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்புக்கான இடங்கள் உள்ளன.பல் மருத்துவத்திற்கான, பி.டி.எஸ்., இடங்களை பொறுத்தவரை, அரசு மருத்துவ கல்லுாரிகளில், 250 இடங்களும், தனியார் கல்லுாரிகளில், 1,900 இடங்களும் உள்ளன. இந்த இடங்களுக்கு, https://tnmedicalselection.net/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை நேற்று துவங்கியது.இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக துவங்கப் பட்ட 10 மருத்துவ கல்லுாரிகளில், தலா 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மட்டுமே உள்ளன. அதனால், ஒவ்வொரு கல்லுாரிக்கும் கூடுதலாக 50 என, 500 எம்.பி.பி.எஸ்., இடங்களை ஏற்படுத்தும்படி, தேசிய மருத்துவ ஆணையமான என்.எம்.சி.,யிடம், தமிழக மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம், இந்த ஆண்டும் விண்ணப்பித்திருந்தது. மேலும், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியனும், டில்லி சென்று வலியுறுத்தி இருந்தார். ஆனால், பேராசிரியர்கள் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு குறைபாடு காரணமாக, ஏற்கனவே, 35 மருத்துவ கல்லுாரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து, என்.எம்.சி., கடிதம் எழுதியிருந்தது.இதற்கு, தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும், இந்த குறைபாடு கள் இருப்பதால், கூடுதல் இடங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என, என்.எம்.சி., தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி கூறியதாவது:

மருத்துவ கல்லுாரிகளுக்கு என்.எம்.சி., வழங்கிய நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதை என்.எம்.சி.,யும் ஏற்று உள்ளது. அதேநேரம், கூடுதலாக, 500 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, கடந்த ஆண்டை போலவே இப்போதும் விண்ணப்பித்து இருந்தோம். அதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே, ஏற்கனவே இருக்கும் இடங்களுக்கு தான், மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

VSMani
ஜூலை 01, 2025 11:17

மாநில அரசு வெறுமனே 500 MBBS சீட் அனுமதி மட்டும் கேட்டால் போதாது. பேராசிரியர்கள் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு குறைபாடு போன்ற குறைபாடுகளை கடந்த ஒரு வருடத்தில் மாநில அரசு சரி செய்திருந்தால் இந்த வருடம் கூடுதலாக 500 MBBS சீட் நமக்கு கிடைத்திருக்கும். குறைபாடுகளை சரி செய்யாமல் இருப்பது தனியார் மருத்துவ கல்லூரிகள்/பல்கலைக்கழம்களின் கட்டணம் மற்றும் டிமாண்ட் அதிகரிக்க செய்து தனியார் கல்வி தந்தை கல்வி வள்ளல்கள் கோடிகளில் புரளச்செய்யும்.


K R GANESAN
ஜூன் 07, 2025 14:35

தனியார் கல்லூரி என்றால் டிரங்க் பெட்டியாவது கிடைக்கும் மருத்துவ இளங்கலை ஒரு பேட்ஜ் வெளியில் வருவதற்குள் மருத்துவ முதுகலை கிளினக்கல் சீட்டே அள்ளிக் குடுக்கலாம் அது திராவிட தனியார் கல்லூரியாக இருந்தாலும் நமக்கு டிரங்க் முக்கியம்


Varadarajan Nagarajan
ஜூன் 07, 2025 07:53

மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் அங்கீகாரமளிக்கும் குழு சென்ற ஆண்டும் இதுபோல பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியது. அதுபோல இந்த ஆண்டும் குறைபாடுகளை சுட்டிக்காட்டியது. அப்படியென்றால் பழைய குறைபாடுகள் சரிசெய்யப்படனவா? அல்லது புதிதாக குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டனவா? தற்பொழுது கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலும் குறைகளை சரிசெய்ததாக சொல்லவில்லை. விளக்கம் அளிக்கப்பட்டதாக மட்டுமே சொல்கின்றனர். இந்த லட்சணத்தில் மருத்துவ கல்லூரிகள் செயல்பாட்டை வைத்துக்கொண்டு எப்பொழுதும் மத்திய அரசை வசை பாடிக்கொண்டு இருந்தால் அதில் பயிலும் மருத்துவ மாணவர்களின் கல்வித்தரம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கவேண்டும்


Gajageswari
ஜூன் 07, 2025 05:51

திராவிட மாடல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை