உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா?: போலீஸ் கமிஷனர் பேட்டி

ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணமா?: போலீஸ் கமிஷனர் பேட்டி

சென்னை: தற்போது வரை விசாரணை நடத்தியதில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம் அளித்துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, நிருபர்கள் சந்திப்பில், சந்தீப் ராய் ரத்தோர் கூறியதாவது: ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருந்ததாக போலீசாருக்கு எந்தத் தகவலும் வரவில்லை. ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில் உளவுத்துறையினர் அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். தேர்தல் நடத்தை விதி காரணமாக போலீசாரிடம் ஒப்படைத்த துப்பாக்கியை ஜூன் 13ம் தேதியே ஆம்ஸ்ட்ராங் திரும்ப பெற்று விட்டார். ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் இருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.

அரசியல் காரணங்கள் இல்லை

அடையாளம் தெரியாத சிலர் ஆம்ஸ்ட்ராங் மீது கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளனர் என போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் உடனடியாக சென்று ஆம்ஸ்ட்ராங்கை மருத்துவமனை கொண்டு சென்றனர். தற்போது வரை விசாரணை நடத்தியதில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை.இதுவரை விசாரணையில் கிடைத்த தகவல்களை மட்டுமே கூறியுள்ளோம். முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான காரணம் தெரிய வரும். கொலை நடந்த 3 மணி நேரத்துக்குள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தண்டனை

கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலைமை கட்டுக்குள் உள்ளது. தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆம்ஸ்ட்ராங் இறுதிச் சடங்கு முடியும் வரை தேவையான இடங்களில் பாதுகாப்பு வழங்கப்படும். கொலைக்கான காரணம், பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஜூலை 06, 2024 23:02

எல்கா டி.வி சேனல்களிலும் இந்த ரவுடியின் கடந்த காலத்தை கழுவி கழுவி ஊத்தறாங்க. இவருக்கு ஏன் இத்தனை அரசியல் தலைகள் பரிஞ்சுக்கிட்டு வர்ராங்கன்னு.புரியலை.


அப்பாவி
ஜூலை 06, 2024 20:26

சரிய்யா. சரணடைஞ்ச எட்டு பேரையும்.போட்டுத் தள்ளிட்டு பேட்டி குடுங்க. தப்பு செஞ்சிருந்தா வெறும்.குற்றம். பொய்யா சரந்டைஞ்சா உண்மை கொலையாளிகளை மறைச்ச கொடுங்குற்றம். ஓட விட்டு சுடுங்க


rama adhavan
ஜூலை 06, 2024 19:08

ஒரு அரசியல் பேட்டி போல் உள்ளது. என்ன அழுத்தமோ?


theruvasagan
ஜூலை 06, 2024 17:29

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு கேஸ் சிலிண்டர் வெடிப்பு எனறு முடிவு. தூத்துக்குடி வட்டார கான்கிராஸ் பிரமுகர் இறப்பு தற்கொலை என்று முடிவு. குற்றம் நடந்த மறு நிமிடமே அது எதனால் என்று சொல்லக்கூடிய நிபுணத்துவம் இருக்குல்ல. வெத்தலையில மையை தடவிப் பார்த்தா அம்புட்டும் தெரிஞ்சுடுமாமே.


K.Muthuraj
ஜூலை 06, 2024 16:13

சில ஆண்டுகளுக்கு முன்பாக, இங்கே திமுக ஆட்சியில் இருந்தபொழுது அங்கே பகுஜன் சமாஜ் ஆட்சி சென்னை ஹை கோர்ட் வளாகத்தில் நடந்த மாணவர் கலவரம் ஞாபகம் இருக்கலாம். அப்பொழுது மாணவர்களை தாக்கியவர்களுக்கு பகுஜன் சமாஜ் சார்ந்தவர்களே சட்ட ஆதரவு கொடுத்தார்கள். இங்கும் அங்கும் என்ன ஒரு அரசியல் தொடர்பு என்று தெரியவில்லை. காவலர்களின் கண் முன்பே சண்டை நடந்தபொழுது காவலர் தலைவர்கள் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என்று கூறி விட்டனர் என்பதாக செய்திகள் வெளிவந்தன.


raja
ஜூலை 06, 2024 15:43

காவல் துறை இப்போது கைகள் கட்டப்பட்டுள்ளன என்பது நன்றாகவே தெரிகிறது ஆளும் திமுக அரசு என்ன செய்துகொண்டு உள்ளது? அல்லது இவர்களே செய்துவிட்டு மற்றவர்களின் மேல் பழியை போடா முயல்கிறதா? நடப்பது என்னவோ நன்றாக இல்லை ஒரு காட்ச்சியின் மாநில தலைவரையே கொலை செய்கிறார்கள் என்றால் சாமானியன் நிலை என்ன தமிழ்நாட்டில்???


Iniyan
ஜூலை 06, 2024 15:26

அரசியல் காரணம் இல்லை என்று அவசரப்பட்டு சொல்வது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. திமுக வின் ஏவல் துறையாக உள்ளது காவல் துறை


sridhar
ஜூலை 06, 2024 16:53

சிலிண்டர் கோவையில் வெடித்த போது அவசர அவசரமாக அது வெறும் சமையல் சிலிண்டர் வெடித்த விபத்து என்று ஒரே நாளில் கண்டுபிடித்து சொன்னது தான் ஞாபகம் வருகிறது .


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி