உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் இல்லை: சபாநாயகர்

பொன்முடி அமைச்சராவதில் சிக்கல் இல்லை: சபாநாயகர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது, அமைச்சராக பதவி ஏற்பதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை,'' என, சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். இதுகுறித்து, சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பதை தவிர்ப்பதற்காக, கவர்னர் டில்லி சென்றாரா என்பது பற்றி எதுவும் தெரியவில்லை. அவ்வாறு சென்றிருக்க மாட்டார். ஏற்கனவே திட்டமிட்ட பணி இருந்திருந்தால், அவர் டில்லி சென்றிருக்கலாம். அவர் வந்த பின், பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று நம்புகிறேன். லோக்சபா தேர்தல் அறிவிப்பிற்கும், பொன்முடி அமைச்சராக பதவி ஏற்புக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது, ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் அமைச்சராக பதவியேற்ற முன் உதாரணம் உள்ளது. எனவே, இங்கும் அதேபோல பொன்முடி அமைச்சராக பதவி ஏற்கலாம். அதில், சட்ட ரீதியாக எந்த பிரச்னையும் ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mohan
மார் 15, 2024 17:57

உச்ச நீதிமன்ற நீதிபதிகளே இது என்ன தீர்ப்பு? ஒன்னு பொன்முடி தவறு செய்தார் அல்லது இல்லை என சொல்வதில் என்ன பிரச்னை? இரண்டும் கெட்டான் தனமாக முடிவு சொல்லாமல் விடுவது வாரிசு அரசியல்காரர்களுக்கு ஏத்தமாக போகும்.


Parthasarathy Badrinarayanan
மார் 15, 2024 15:31

தொகுதி காலியானதை அறிவிக்க கோர்ட் உத்தரவு தாமதமானதாகக் கூறப்பட்டது. இப்போது இந்த உத்தரவு மட்டும் சீக்கிரம் எப்படி வந்தது? சபாநாயகர் அப்பாவு பதஇல் சொல்வாரா? அரசிதழில் தொகுதி காலி என அறிவித்தபின் அதை ரத்து செய்யமுடியுமா. சபாநாயகருக்குத்தெரியாது. அறிவாளிகள்பதில் அளியுங்கள்


சிவபாலன்
மார் 15, 2024 11:26

என்னடா உலகம் இது !!!


VENKATASUBRAMANIAN
மார் 15, 2024 08:23

நம் நாட்டில் சட்டம் திருத்த படவேண்டும். அப்போதுதான் இதற்கு விடவுகாலம் பிறக்கும். பாஜக தனி மெஜாரிட்டியுடன் வந்தால் உடனே செய்ய வேண்டும்.


Mani . V
மார் 15, 2024 06:34

ஆம், ஊழல் பேர்வழிகள் அமைச்சராவதில் சிக்கல் இல்லை.


Matt P
மார் 15, 2024 05:17

தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது, ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் அமைச்சராக பதவியேற்ற ம. ராஜஸ்தானில் ஒருவர் நன்னடத்தை இல்லாத ஒருவர் ..பதவியிலிருக்கிறார். அதனால் நாங்களும் பின்பற்றுவோம். இவரை விட்டஆள் திமுகவில் வேறு யாருமே இல்லையா? அப்படி என்ன பிடிவாதம் அவரூக்கு கொடுத்து தான் தீருவேன் என்று. ஏற்கெனவே ஒருவர் அவர் வகித்த பதவியிற் பார்த்து கொண்டு தானே இருக்கிறார். அப்படியே இருக்கட்டும்ஆ . இதிலிருந்தே தெரிகிறது திருட்டு திராவிடம் என்றால் என்ன்ன என்று...திமுக்கண்ணா நேரு துர போணுமுடி ஸ்டாலி இவர்களே தொடர வேண்டும் என்று.


Palanisamy Sekar
மார் 15, 2024 03:41

சட்டசிக்கல் இல்லை என்றாலும் மக்கள் மத்தியில் ஒருவித வெறுப்புணர்வே மேலோங்கி இருக்கிறது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தண்டிக்க தகுதி இல்லை என்கிறதா உச்சநீதிமன்றம்? போகிற போக்கை பார்த்தால் குற்றவாளியென்று ஒப்புக்கொண்ட மந்திரிக்கு நஷ்ட ஈடாக இவ்வளவு கோடி கொடுக்கணும் என்றெல்லாம் தீர்ப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. முப்பது நாட்கள் கால அவகாசம் கொடுத்த சிறப்பு நீதிமன்றத்தின் சலுகையை உச்சநீதிமன்றம் மேலும் நீட்டித்து மேலும் பல சலுகைகளை வாரி வாரி வழங்கிவிட்டதே..இதுதான் ஜனங்களுக்கிடையே உள்ள ஆற்றாமை. மந்திரிக்கு தெரியும் எப்படி என்ன செய்வதென்று. வாதாடிய வக்கீலுக்கான செலவை ஈடுகட்டிடுவார் என்கிற தைரியத்தை மேலும் மேலும் சொத்துக்குவிக்க தைரியம் கொடுத்த உச்சநீதிமன்றத்துக்கு வாழ்த்துக்கள்..


வெகுளி
மார் 15, 2024 02:58

பொன்முடி முதல் அமைச்சராவதில் சிக்கல் இருக்கான்னும் நீங்களே சொல்லுங்க... ஹிஹி....


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை