உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்

சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு இல்லை: வாகனங்களுக்கு மட்டுமே : சென்னை ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'' ஊட்டி, கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு,'' என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களில், எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது தொடர்பாக, சென்னை ஐ.ஐ.டி., மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.போராட்டம்இந்த ஆய்வுகள் நிறைவு பெற கால தாமதமாகும் என்பதால், கோடை விடுமுறையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு உத்தரவு பிறப்பித்தது.ஊட்டிக்குள் வார நாட்களில், 6,000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்கள்; கொடைக்கானலில் வார நாட்களில் 4,000, வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.இந்த வாகன கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊட்டியில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.இந்நிலையில், வாகன கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ''ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் வாகனங்களுக்கான கட்டுப்பாடு குறித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரிக்க வேண்டும்,'' என்று கோரிக்கை விடுத்தார்.இதன்படி இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ' ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஆய்வுக்கு பிறகு எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் ,' என தெரிவித்தார்.இதனையடுத்து நீதிபதிகள், ' ஊட்டி, கொடைக்கானல் வரும் பயணிகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த மனு ஏப்.,8 ல் விசாரிக்கப்படும்' எனத் தெரிவித்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

pmnr pmnr
ஏப் 04, 2025 23:17

super


S Ravi
ஏப் 04, 2025 21:54

The solution for this is there should be enough Government buses to hill stations. Also 20 seater vehicles to be operated within the hill cities which covers all the tourist places. This will save the environment, reduce vehicle traffic and be cost effective to the public.


தமிழ்வேள்
ஏப் 04, 2025 20:02

பொது போக்குவரத்து வாகனங்களுக்கு தடையில்லை..அதிக பஸ் சர்வீஸ்கள் இயக்கப்பட வேண்டும்.. காரில் வருபவர் குடும்பமாக வந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும்...


SIVAKUMAR
ஏப் 04, 2025 18:10

வியாபாரிகள் எல்லோரும் சேர்ந்து இரண்டு பெட்டி கொடுத்து இருந்தால் பாஸ் ரத்து ஆகி இருக்கும்


Venkateswaran Rajaram
ஏப் 04, 2025 17:32

நீதிபதி சொல்வதும் நல்ல கருத்து தான்,.. வாகனங்கள் அடிவாரத்திலேயே நிறுத்தப்பட வேண்டும் மேலே செல்வதற்கு அரசு வாகனங்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும், அரசு வாகனங்கள் கீழே இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மேலே கொண்டு போய் இறக்கி விடுவார்கள் மீண்டும் வாகனம் கீழே இறங்கி விடும் அங்கே சுற்றிப் பார்ப்பதற்கு இதே போல் அரசு பேருந்துகளை இயக்கலாம் ஒரு காரில் 5 பேர் தான் செல்ல முடியும் அப்படி என்றால் நூறு பேர் செல்வதற்கு 20 வாகனங்கள் தேவைப்படுகிறது அதற்கு ஒரே பேருந்து வாக இயக்கலாம்.. இவ்வாறு செய்தால் வாகனங்களை முழுமையாக கட்டுப்படுத்தலாம் மலைவாசிஸ்தனங்களில் மாசி ஏற்படாமலும் தவிர்க்கலாம்


Venkateswaran Rajaram
ஏப் 04, 2025 17:28

இரண்டுமே ஒன்றுதான் சுற்றுலா பயணிகளுக்கு தடை இல்லை வாகனங்களுக்கு மட்டும் தான் தடை.. இரண்டுக்கும் உள்ள அர்த்தம் ஒன்றுதான் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் தான் வர முடியும் இல்லையென்றால் பாதயாத்திரையாக நடந்து தான் செல்ல வேண்டும்..


Keshavan.J
ஏப் 04, 2025 19:54

ட்டூரிசுகள் பஸ் அல்லது ட்ரைனில் செல்லலாம் . குடும்பம் குடும்பமாக காரில் செல்வதை தவிர்க்க வேண்டும்.


Mohan
ஏப் 04, 2025 16:54

எனக்கென்னமோ தமிழ்நாட்டு நீதியரசர்கள் திராவிட பள்ளியில் படுச்சிருப்பாங்க போல தெரியுது .. வாகனத்துல போகமே நாங்க என்ன நடந்து போறதா


ஆசாமி
ஏப் 04, 2025 16:47

எவன்யா இந்த அறிவாளி ?


மணி
ஏப் 04, 2025 16:32

இதுக்கு பெயர் தான் படித்த ....... என்பது


அப்பாவி
ஏப் 04, 2025 16:12

தத்திகள். எல்லோரும் நடந்தே ஊட்டிக்குப் போக வேண்டியதுதான் கோவாலு.


ديفيد رافائيل
ஏப் 04, 2025 16:37

Bus ல போகலாமே ஊட்டிக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை