உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக போலீஸ் மீது நம்பிக்கையில்லை: திருமா

தமிழக போலீஸ் மீது நம்பிக்கையில்லை: திருமா

''தமிழக காவல் துறை மீது நம்பிக்கை இழந்ததால், வேங்கைவயல் விவகாரத்தை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.அவர் அளித்த பேட்டி:சனாதன எதிர்ப்பில் அம்பேத்கரோடு, ஈ.வெ.ரா., கைகோர்த்து நின்றார். அம்பேத்கரையும், ஈ.வெ.ரா.,வையும், எதிரெதிர் துருவங்களில் நிறுத்துவது வேடிக்கையாக உள்ளது. அவர்களை பின்பற்றுவோர் இடையே வேறுபாடு ஏற்படுத்தும் முயற்சி எடுபடாது. ஈ.வெ.ரா.,வுக்கு எதிரான விமர்சனத்தை, அம்பேத்கருக்கு எதிரானதாகவே பார்க்கிறோம். சீமானின் போக்கு, தமிழக மக்களின் நலனுக்கு நேரெதிராக இருப்பது கவலை அளிக்கிறது. அவரை பின்பற்றுவோர், இவ்விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.வேங்கைவயல் பிரச்னையில் சி.பி.சி.ஐ.டி., விசாரணை ஏமாற்றம் அளித்துள்ளது. உள்ளூர் குற்றப்பிரிவு காவலர்கள் விசாரிக்கக் கூடாது; சிறப்பு புலனாய்வு விசாரணை தேவை என, நாம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், சி.பி.சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு ஆண்டு கால விசாரணைக்குப் பின், புகார் அளித்தவர்களே, பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகள் என்று கூறியிருப்பது அதிர்ச்சிஅளிக்கிறது.இந்த வழக்குக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றம், இந்த குற்றப் பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. தமிழக அரசு, இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும். வேங்கைவயல் கிராம மக்களும், வி.சி., கட்சியினரும் காவல் துறையின் போக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்; அவர்களை அச்சுறுத்தி கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.தி.மு.க., அரசு சமூக நீதியின் பக்கம் நிற்கும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க துணையாக இருக்கும் என்றும் நம்புகிறோம்.இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வெளியிட்டுள்ள ஆடியோ, வீடியோ எல்லாம் ஏற்கனவே, 'வாட்ஸாப்'பில் பரவியவை தான்; புதிதாக ஒன்றுமில்லை. அவர்கள் டி.என்.ஏ., என்ற மரபணு பரிசோதனை செய்ததையும், அதற்காக தான் இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளனர். டி.என்.ஏ., பரிசோதனை அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏற்கனவே குற்றப்பிரிவு போலீசார், பட்டியலின இளைஞர்களிடம் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி தாக்கியுள்ளனர். மேலும், சி.பி.சி.ஐ.டி., காவலர்களும், 'நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் பிரச்னை ஏற்படும்' என, மிரட்டியுள்ளனர். இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்றோம். ஆனாலும், அதே வழியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. சி.பி.ஐ., மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதேநேரம், தமிழ்நாடு காவல் துறை மீது நம்பிக்கை இழந்ததால், சி.பி.ஐ., விசாரணை கோருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V வைகுண்டேஸ்வரன்
ஜன 27, 2025 16:06

வாங்கின காசுக்கு மேல அடிச்சு வுடுயா. குடிநீர் தொட்டியில் இப்படி ஒரு கேவலமான செயலை கண்டிப்பா எந்த ஆரியரும் செய்ய வாய்ப்பே இல்லை. ஓபிசி யிலும் பெரும்பாலருக்கு படிப்பு வேலை தொழில் இருக்கிறது. படிப்பு, அறிவு, வேலை, தொழில் இது எதுவும் இல்லாத, ஓசி சோறுக்கும், மதுவுக்கும் அடிமையாக திரிகிற வெட்டிக் கூட்டத்திலிருந்து எவனோ தான் செய்திருக்க வேண்டும். அந்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்த சி பி சி ஐ டி போலிசுக்கு பாராட்டுக்கள். இனி ஏதாவது ஒரு வக்கீல், நீதிபதி இவனுங்களுக்கு ஜாமீன் குடுக்காம இருக்கணுமே.


சமீபத்திய செய்தி