வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தனியார் தண்ணீர் லாரிகள் சப்ளை சென்னையில் தொடர்ந்துஉள்ளது
அய்யா காவேரி வறன்டு கிடக்கிறது மேட்டூர் அணை நிரம்பவில்லை கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்
சென்னை வானிலை மையத்தின் இயக்குனர் துரை நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் நவம்பர் 1 வரை 22 செமீ மழை பதிவாகி உள்ளது. இக்கால கட்டத்தில் பதிவாக வேண்டிய இயல்பான மழை அளவு 19 செமீஇயல்பை விட 18 சதவீதம் அதிகம் பதிவாகி உள்ளது.நவம்பரில் வடகிழக்கு பருவமழை அதிகமாக பதிவாகும். புயல் உருவாகும் போது, மழை அளவு இயல்பில் இருந்து அதிகமாக பதிவாகும்.7 ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது தென் கடலோர மாவட்டங்களிலும், மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.நவம்பர் 15ம் தேதிக்கு பிறகு புயல் உருவாக வாய்ப்பு உள்ளது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உருவாகும் புயல் தமிழகத்திற்கு வரும். அக்டோபரில் உருவாகும் புயல் வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவுக்கு செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் தண்ணீர் லாரிகள் சப்ளை சென்னையில் தொடர்ந்துஉள்ளது
அய்யா காவேரி வறன்டு கிடக்கிறது மேட்டூர் அணை நிரம்பவில்லை கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்