உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொள்கை கூட்டணி அல்ல: சூட்கேஸ் கூட்டணி *தி.மு.க.,வை கிண்டல் செய்யும் ராஜூ

கொள்கை கூட்டணி அல்ல: சூட்கேஸ் கூட்டணி *தி.மு.க.,வை கிண்டல் செய்யும் ராஜூ

வாடிப்பட்டி:மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அளித்த பேட்டி: தி.மு.க., அமைச்சர்கள் தரம் தாழ்ந்து சென்று விட்டனர். மத்திய தொகுப்பில் இருந்து நிதியை பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று கூறி, தாங்களே அதை ஏற்பாடு செய்து கொடுப்பது போல சாதனையாக பேசிக் கொண்டுள்ளனர். இனி, தி.மு.க.,வினர் டிபன் பாக்ஸ் கொடுத்தாலும் சரி, தங்க கட்டியே தந்தாலும் சரி, மக்களிடம் நாடகம் நீடிக்காது. எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறுவது, ஆடு நனையுது என ஓநாய் கவலைப்பட்ட கதையாக உள்ளது. தி.மு.க.,வினர் அ.தி.மு.க., மீது கரிசனம் காட்டுவது ஏமாற்று வேலை. தி.மு.க.,கூட்டணியில் உள்ளவர்கள் எதிராக பேசினால் 'சூட்கேஸை' எடுத்துக் கொண்டு, பேசியவர் வீட்டுக்கு செல்கிறார்கள். இதைக் கேட்டால் 'கொள்கை கூட்டணி' என்கிறார்கள். இது 'சூட்கேஸ் கூட்டணி' போலத்தான் உள்ளது.களத்திற்கு புதிதாக வந்தவர் விஜய்.தி.மு.க., எப்படி வேஷம் போடுகிறது என்று, நாங்கள் சொல்வதை தான் அவரும் சொல்லியுள்ளார். எதிரியாக இருந்தாலும்கூட பேசுவது தானே தமிழரின் கலாசாரம். நான் வரும் வழியில்கூட தி.மு.க.,வினரை சந்தித்து பேசினேன். மதுரையில் பிறந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்து பேசியதில் தவறு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை