உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய்யால் பாதிப்பு இல்லை: சீமான்

விஜய்யால் பாதிப்பு இல்லை: சீமான்

புதுக்கோட்டை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:பீஹார் முதல்வர் நிதீஷ்குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் பா.ஜ., ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து விலகினால், தி.மு.க.,வின் 22 எம்.பி.,க்களும் பா.ஜ.,வுக்கு முட்டுக்கொடுக்க சென்று விடுவர். விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் அ.தி.மு.க., பங்கேற்றால், அங்கு சென்று அவர்கள் என்ன பேசுவார்கள்? நினைத்தாலே காமெடியாகத்தான் இருக்கிறது. மதுவை ஒழிக்க வேண்டும் என அவர்களாலும் எப்படி பேச முடியும்?ஆட்சியில் பங்கு தர முடியாது என்று சொல்லும் கட்சிகள். தனித்து நின்று தேர்தலை சந்திக்க வேண்டும். நாங்கள் 2026லும் தனித்துதான் போட்டியிடுவோம். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால், எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்களால்தான் எப்போதுமே, மற்றவர்களுக்கு பாதிப்பு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ராமகிருஷ்ணன்
செப் 19, 2024 18:36

உன் புலம்பல் பார்த்தால் உனக்கு தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிகிறது. எது எப்படி இருந்தாலும் அரசியல் தரம்குறைந்து வருவதை பார்த்து வருத்தமாக உள்ளது.


Ms Mahadevan Mahadevan
செப் 19, 2024 16:14

விஜய் கட்சி ஆரம்பிப்பது சுத்த வேஸ்ட் மக்கள் சேவை செய்ய விரும்பினால் எத்தனையோ வழி இருக்கு. அதை விட்டு கட்சி ஆரம்பித்து அடுத்தவன் சொன்ன அதே கொள்கைகளை தன் கொள்கைகள் என்று சொல்லி அவைகள் போலவே ஊழல் செய்யவா? குண்டும் குழியும் ஆன தெருக்களை சீர் செய்ய லாம், குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்யலாம், எளிய மக்களுக்கு மருத்துவ உதவி செய்யலாம். மக்களிடம் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் ட்


Ms Mahadevan Mahadevan
செப் 19, 2024 16:03

இப்பத்தான் சரியாக சொன்னீர்கள். எல்லாகட்சிகளும் தனித்து போட்டி இட்டு 18 சதவீத வாக்குகள் வாங்காத கட்சிகள் அரசியலை விட்டு வெளியே ரணும். எந்த கட்சிகாவது தைரியம் இருக்கா? 18 சதவீத ஆதரவில்லாமல் நாட்டை ஆள நினைப்பது தேச துரோகம்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 19, 2024 09:51

அவன் டீம்காவின் பி டீம் என்றால் நீயி சி டீம் ..... பாஜக உள்ளே வந்துவிடக்கூடாது என்பது பாஜகவை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய டீம்கா உனக்கு கொடுத்த அசைன்மென்ட் .... - வாஜ்பாயி தலைமையிலான மத்திய என் டி ஏ கூட்டணியில் ஐந்து வருடங்கள் சுருட்டிய டீம்கா உனக்கு ரகசிய எஜமானன் - இப்படித்தான் பேசுவாய் ...........


கோவிந்தராசு
செப் 19, 2024 08:20

ந் தணிச்சு நின்ற ஏகபட்ட குடும்பத்த காலி பண்ணீருவ


புதிய வீடியோ