உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை: விஜய்யின் த.வெ.க அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை: விஜய்யின் த.வெ.க அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 2026ல் தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக வரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என எந்த தேர்தலிலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சி போட்டியிடாது என அறிவித்துள்ளது. மேலும், எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=illou5fj&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஜூலை 10ல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த பிப்.,2ம் தேதி வெளியிட்ட கட்சித் துவக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே, கட்சித் தலைவர் விஜய், எங்களின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார். விரைவில் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் செயல்திட்டங்களை எங்களின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, 2026ல் நடைபெற உள்ள சட்டசபை பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பணியாற்றுவது தான் எங்கள் இலக்கு. எனவே, அதுவரை இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது. ஜூலை 10ல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடாது; எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தநாவின் பரிதாபம்
ஜூன் 18, 2024 21:28

, ஆமாம் உங்கள் திட்டம் தான் ரொம்ப தெளிவா விடியாதவர்களாள் தீர்மானிச்சாச்சு, மீண்டும் அவர்களை உட்கார வச்சு ஒரு ராஜ்ய சபா சீட்டு வாங்கிகிட்டு புரியா நாயகனுக்கு அடுத்தாப்ல போய் உட்காருங்க


venugopal s
ஜூன் 18, 2024 16:55

மறை கழண்டு போன மற்றொரு கேஸ் இவர்!


A Venkatachalam
ஜூன் 18, 2024 15:39

இவர் என்ன தமிழ் நாட்டு மக்களுக்காக செய்தார். எதை வச்சி அரசியல் செய்வார் இங்கு இருக்கும் கார்பொரேட் கம்பனிக்கு எதிரா. சம்பாதித்த பணத்தில் 1 சதவீதம் தொண்டர்களுக்கு செலவு செய்திருந்தால் கூட பரவாயில்லை. இல்லை திரு விஜயகாந்த் மாதிரி கூட இருந்த ஆர்ட்டிஸ்ட் களுக்கு ஏதாவது உண்டா அதுவும் இல்லை.


Sivasankaran Kannan
ஜூன் 18, 2024 15:10

விரைவில் 2026 ல் போட்டி இல்ல என்று அறிக்கை வரும்


Krush
ஜூன் 18, 2024 14:26

ஒருத்தருக்கு எழுந்துரிச்சி நீக்கவே வக்கு இல்லயாம்...


s sambath kumar
ஜூன் 18, 2024 13:53

தொல்லை தாங்க முடியலை. சம்பாதிச்ச பணத்தை காப்பாத்திக்க அரசியலுக்கு வந்து ....


Jysenn
ஜூன் 18, 2024 13:35

Super ...


சுலைமான்
ஜூன் 18, 2024 12:14

இவன் திமுக வால் இறக்குமதி செய்யப்பட்ட கைக்கூலி.... ரஜினிக்கு போட்டியாக கமலை எப்படி இறக்கினார்களோ அதே மாதிரி அண்ணாமலைக்கு எதிராக இறக்கப்பட்ட ஆள்தான் இந்த மிஷனரி விஜய்.


Velan Iyengaar
ஜூன் 18, 2024 12:06

இன்னொரு சிரிப்பு இலவசம் ஐயோ யையோ ...


Bala
ஜூன் 18, 2024 12:05

விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் கட்சி ஆதரவாளர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவிற்கு வாக்களித்து வெற்றிபெறச்செய்தால் மட்டுமே அவர்கள் மாற்றத்தை நோக்கி செல்கிறார்கள் என்று அர்த்தம். இல்லாவிட்டால் கமல் கதிதான். கட்சியை திமுகவுடன் இணைத்துவிட வேண்டியதுதான்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை