உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவாதிக்கவில்லை; வியந்து பேசவில்லை; திருமாவளவன் வருத்தம் நியாயமானதா?

விவாதிக்கவில்லை; வியந்து பேசவில்லை; திருமாவளவன் வருத்தம் நியாயமானதா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கள்ளக்குறிச்சி மாநாட்டில் கூடிய கூட்டம் பற்றி யாரும் வியந்து பேசவில்லை; விவாதிக்கவில்லை' என்று வருத்தப்பட்டு திருமாவளவன் பேசியிருப்பது, நியாயமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: வி.சி.,க்கள் சார்பில் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது; அதில், 2 லட்சம் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், அதை எல்லாம் யாரும் வியந்து பேசவில்லை; பெயருக்குக் கூட விவாதிக்கவில்லை. வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து, 'இனி திருமாவளவன் தலைமையில்தான் தமிழகத்தில் ஆட்சி அமையும்' என, யாரும் விவாத பொருளாக்கவில்லை. எல்லாரும் வி.சி.,க்களை குறைத்து மதிப்பிட்டு, சிறுமைப்படுத்த பார்க்கின்றனர்.டவுட் தனபாலு கமென்ட்: உங்க கட்சிக்கு செல்வாக்கு இருக்கிற கள்ளக்குறிச்சியில் மாநாடு நடத்தி, 2 லட்சம் பேரை திரட்டியது பெரிய விஷயமில்லை... கன்னியாகுமரியிலோ, திருநெல்வேலியிலோ மாநாடு நடத்தி, இந்த கூட்டத்தை காட்டியிருந்தா, 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

சுலைமான்
நவ 13, 2024 06:40

உன்னையெல்லாம் ஒரு ஆளா கூட எவனும் நினைக்கலனு அர்த்தம். புரிஞ்சிதா பிளாஸ்டிக் சேர் அவர்களே! யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று திமுகவுக்கு தெரியும். மக்களுக்கும் தெரியும். ரெண்டு லட்சம் பெண்கள் வந்தாங்கனு கதை விடுறியே! அப்ப நீங்கதான் முதல்வர் வேட்பாளர்னு சொல்லி 234 தொகுதிகளிலும் தேர்தல்ல தனியா நின்னு ஜெயிச்சி காட்டுங்க...... உங்க முதல்வர் கனவுக்கு வழி கிடைக்கும்.


தாமரை மலர்கிறது
நவ 12, 2024 20:08

திருமாவை மதிக்காத திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி பிஜேபி, எடப்பாடி அல்லது ஜோசப் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது நல்லது. ஆதவ் அர்ஜுனா பேச்சால், திமுக உள்குத்து செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த முறை திமுகவுடன் கூட்டணி அமைத்தால், அதோ கதி தான்.


Balamurugan
நவ 12, 2024 16:14

முதலில் நீயே உன்னை உனக்குள் மதிக்க கற்றுக்கொள். கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டத்தில் அவர்களுக்கு அமர உட்க்காரும் நாற்காலியில் சமமாக உட்காராமல் பிளாஸ்டிக் நாற்காலியில் அமராதே


theruvasagan
நவ 12, 2024 16:09

ஏம்பா வியந்து பேசலை. அந்த மது ஒழிப்பு மாநாட்டுக்கு கூட்டத்திலிருந்து சரக்கு பிரியாணி வரை ஸ்பான்சர் செய்தவனுக சாராய ஆலை முதலாளிகள்தானே என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டு பேசினாங்களே. அதல்லாம் காதுல விழலியா.


MP.K
நவ 12, 2024 15:53

பணமோ, மதுவோ, மாமிசமோ கொடுத்து கூட்டம் கூட்டி அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டி உள்ளது.


Narayanan
நவ 12, 2024 14:53

அந்த கூட்டத்தை கூட்டி கொடுத்ததே அமைச்சர் நேருதானே அதனால்தானே மகளிர் மகாநாடு என்று பெயர்மாற்றி நடத்தினீர்கள் . மகாநாட்டிற்கு முன் நீங்கள் ஸ்டாலினை சந்தித்து பேசும்போது அவர் உங்களுக்கு உதவி செய்து கூட்டத்தின் பெயர்மாற்றம் செய்யச்சொன்னது எங்களுக்கு தெரியும் , மேலும் மாநாட்டிற்கு பணமும் கொடுத்தது திமுக. அதன் காரணமாகவே திமுக கூட்டணியில் இருந்து விலகும் எண்ணமே இல்லை என்று பறை சாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்


sankar
நவ 12, 2024 14:17

நம்புகிற நாலுபேர் அடமானம் வச்சு மூணு சீட்டு வாங்குவது எல்லாம் ஒரு கட்சியா


kumarkv
நவ 12, 2024 13:59

ஒருவர் கூட மதிப்பதில்லை


Thiru
நவ 12, 2024 13:57

நீயெல்லாம் எதுக்கு அரசியல் பண்ணிக்கிட்டு.


sridhar
நவ 12, 2024 13:42

பிளாஸ்டிக் chair காரனுக்கு இவ்வளவு வாயா என்று வியந்து பேசினார்கள் , நீங்க கவனிக்கல .