உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கனிமவள கொள்ளையை தடுக்கும் விஷயத்தில் மாநில அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

கனிமவள கொள்ளையை தடுக்கும் விஷயத்தில் மாநில அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை: சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி

சென்னை: 'கனிமவள கொள்ளையை தடுப்பதில், மாநில அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை' என, அதிருப்தி தெரிவித்த, சென்னை உயர் நீதிமன்றம், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை சேர்ந்தவர் நடேசன். இவர், நெக்குந்தி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் நேரில் ஆஜராகி, விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுரங்கத்துறை இயக்குநர் டி.மோகன் நேரில் ஆஜரானார். அவரிடம், 'தமிழகத்தில் தொடரும் கனிமவளக் கொள்ளையை தடுக்க, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த இயக்குநர், ''கனிம வளங்களை எடுப்பதற்கு, 'ஆன்லைன்' பதிவு முறை, ஜி.பி.எஸ்., வாயிலாக கண்காணிப்பு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மேலும், கனிமவளங்களை சட்டவிரோதமாக திருடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது,'' என, தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது: கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு அபராதம் விதிப்பது மட்டும் போதாது. இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிம வளங்கள், நாட்டின் கட்டமைப்புக்கு மிக முக்கியமான சொத்து. அவற்றை கொள்ளையடிக்க, ஒருபோதும் அனுமதிக்க முடியாது. கனிமவள கொள்ளையர்களுக்கு, உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது இதுவரை ஏன் ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை. அரசு அதிகாரிகளே இவ்வாறு செயல்பட்டால், கனிம வள திருட்டை தடுக்கவே முடியாது. இந்த விவகாரத்தில், தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், கனிம வள கொள்ளையை தடுப்பதில், மாநில அரசின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை. இதை இப்படியே அனுமதித்தால், அது பெரிய ஆபத்துக்கு வழிவகுக்கும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். மேலும், சட்டவிரோத கனிமவள கொள்ளையை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அடுத்த வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, சுரங்கத்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

karupanasamy
டிச 11, 2025 10:15

எகிறிக்குதிப்பான்


NAGARAJAN
டிச 11, 2025 09:38

பல விஷயங்களில் மத்திய அரசின் மீது திருப்தி இல்லை. .


Modisha
டிச 11, 2025 11:11

பாகிஸ்தான்ல கூப்பிடுறாங்க .


BALACHANDRAN
டிச 11, 2025 09:18

வ உ சி பாரதியார் வீரபாண்டிய கட்டபொம்மன் கொடிகாத்த குமரன் ஜான்சி ராணி லட்சுமி பாய் வாஞ்சி நாதன் தன்னுடைய குடும்பம் தவிர்த்து தேசத்துக்காக அத்தனை உள்ளங்கள் அவர்களுக்கான சிலை சரியான முறையில் இருக்கிறதா என்று தெரியவில்லை. இவர்களை விட தேசத்திற்கு வேறு யாரும் நல்லவர்களாக இருப்பார்கள் நாட்டுக்காக உழைத்தவர்கள் இப்பொழுது ஓட்டுக்காக உழைக்கிறார்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 11, 2025 09:16

செய்யுறதே கமாண்டரின் சர்க்கார்தானே .....


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
டிச 11, 2025 09:05

அப்போ சுப்பிரமணி சார் குமரப்பன் சார் மேல கனி தலைமையில் அடுத்த மனு ரெடி


theruvasagan
டிச 11, 2025 08:51

சட்டத்தின் மாட்சிமைக்கு அவுட் ஆப் கன்ட்ரோலில் இயங்குகிறது நீதிமான் அவர்களே. நீங்கள் கேள்வி கேட்டால் நீதிமன்றத்துக்கு வந்து நாங்கள் எல்லாத்துக்கும் அவுட் ஆப் கன்ட்ரோல் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவார்கள்.


kumaran
டிச 11, 2025 08:18

கனிமவளங்கள் இரவு பகல் பாராமல் கேரளாவிற்கு பெரிய பெரிய டாரஸ் வண்டிகளில் போய்கொண்டு தான் இருக்கிறது யாரும் கண்டு கொள்வார்கள் இல்லை இப்போது இங்கே மணல் ஜல்லிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது விலையும் உயர்ந்துள்ளது கேட்டால் வட்டம் மாவட்டம் என்று கீழிருந்து மேல்வரைக்கும் எல்லாம் கவனிப்பு தான் என்கிறார்கள் இந்த தமிழ் நாடு குட்டிசுவர் ஆகிக்கொண்டு இருக்கிறது ஆண்டவன் தான் காப்பாத்தனும்


raja
டிச 11, 2025 08:18

பார்துங்க எஜமான்.. திருட்டு திராவிட தமிழகத்தை சுரண்டும் ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பம் உங்க மேலையும் நாடாளும் மன்றத்தில் இம்பின்ச் மெண்ட் கொண்டுவர பொரானுவோ.. கேடுகெட்ட இழி பிறவிகள் அவர்கள் தமிழகத்தை தமிழனை விங்யான முறையில் சுரண்டுவதே அவனுவோ பொழப்பு ..


Field Marshal
டிச 11, 2025 08:17

கோர்ட்டுகள் முதல்வரின் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும் என்று தீர்மானம் போடுவார்கள்


VENKATASUBRAMANIAN
டிச 11, 2025 08:07

திமுக அரசு என்றைக்கும் நீதிமன்றத்ததை மதித்தது. அரசாங்கத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார்கள். அது அழிவை நோக்கி செல்லும். இதுதான் வரலாறு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை