உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காய்ச்சல் பாதிப்பு பகுதிகளில் மட்டுமே இனி சிறப்பு முகாம்

காய்ச்சல் பாதிப்பு பகுதிகளில் மட்டுமே இனி சிறப்பு முகாம்

சென்னை : 'காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் மட்டும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்' என, பொது சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.பருவ மழைக்கால தொற்று நோய்கள் பரவலை தடுக்க, கடந்த அக்., 29 முதல் டிச., 30 வரை, 2,000த்துக்கும் மேற்பட்ட இடங்களில் வாராந்திர சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இனி, காய்ச்சல் பாதிப்புள்ள பகுதிகளில் மட்டும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:பருவ கால நோய் தொற்று பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. கொசுக்கள் வாயிலாக பரவும் டெங்கு, சிக்குன் குனியா, எலி காய்ச்சல் போன்ற பாதிப்புகள், மிக குறைவாக பதிவாகி உள்ளன. கொரோனா, இன்புளூயன்ஸா தொற்றுகள் மட்டுமே வேகமாக பரவ வாய்ப்புள்ளது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரசாரங்களை துவக்கி உள்ளோம்.மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. அடுத்தக்கட்டமாக, காய்ச்சல் மற்றும் வேறு வகையான தொற்று பாதிப்புகள் அதிகமாக உள்ள பகுதி களில் மட்டும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். நடமாடும் மருத்துவ குழுக்கள் வாயிலாக, அங்கு மருத்துவப் பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி