உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்., 21ல் தீபாவளி சிறப்பு வர்த்தகம் என்.எஸ்.இ., தகவல்

அக்., 21ல் தீபாவளி சிறப்பு வர்த்தகம் என்.எஸ்.இ., தகவல்

தீ பாவளி பண்டிகையை முன்னிட்டு, பங்கு சந்தையில் சிறப்பு வர்த்தகம் ஒரு மணி நேரம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பு வர்த்தகம், அக்., 21ம் தேதி செவ்வாய் கிழமை பிற்பகல் 1:45 மணி முதல் 2:45 மணி வரை நடைபெறும் என என்.எஸ்.இ., அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளியன்று, மாலை 6:00 முதல் 7:00 மணி வரை சிறப்பு பங்கு வர்த்தகம் நடைபெற்றது. வட மாநிலங்களில் தீபாவளி நாள், வர்த்தகத்துக்கான புதிய ஆண்டு துவக்கமாக கடைப்பிடிக்கப்படுவதால், விடுமுறை தினமாக இருப்பினும், ஒரு மணி நேர சிறப்பு பங்கு வர்த்தகம் நடைபெறும். இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீடுகள் செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும் என முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் அக்., 20ம் தேதி திங்கள் கிழமை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், வட மாநிலங்களில் அக்., 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. படம் Stock illustration ID:1337438475


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ