உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உடுமலையில் நம்பர் லாட்டரி விற்பனை அமோகம்; தினமும் ரூ.30 லட்சம் புரளுது:

உடுமலையில் நம்பர் லாட்டரி விற்பனை அமோகம்; தினமும் ரூ.30 லட்சம் புரளுது:

உடுமலை : தமிழகத்தில், லாட்டரி சீட்டுக்களால் குடும்பங்கள் பாதிக்கப்படுவது, தற்கொலைகளை தடுக்கும் வகையில், லாட்டரி விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில், 'நம்பர் லாட்டரி' விற்பனை அமோகமாக நடக்கிறது.நகர பகுதியில், காந்திநகர், காந்திசவுக், போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், எம்.பி., நகர் என பல்வேறு பகுதிகளில் லாட்டரி கும்பல் ரகசியமாக கடை திறந்து, விற்பனை செய்து வருகிறது.இம்முறையில், கேரளா, சிக்கிம் உள்ளிட்ட பல்வேறு மாநில லாட்டரிகளின், 'ஆன்லைன்' குலுக்கல் நேரத்திற்கு ஏற்ப, இக்கும்பல் துண்டு சீட்டில் நம்பர் எழுதி வழங்குகிறது. ஒரு லட்சம் பரிசுக்கு, ரூ. 50, கூடுதல் பரிசுக்கு ஏற்ப, 120, 360, ஆயிரம் ரூபாய் என்றும், அதற்கு ஆங்கில எழுத்து வரிசையுடன் எண்களை எழுதி, விற்பனை செய்கின்றனர்.குறிப்பிட்ட நேரத்தில், அந்த பெயருடைய லாட்டரி குலுக்கல் முடிந்து, 'ஆன்லைன்' வாயிலாக வெளியிடப்படும் முடிவு அடிப்படையில் பரிசு வழங்கப்படுகிறது. சிறிய அளவிலான பரிசுகளை மட்டும் வழங்கும் அக்கும்பல், பெரிய அளவில் விழுந்தால், அவர்களை, அடித்து விரட்டும் சம்பவங்கள் நடந்து வருகிறது.அதே போல், 'வாட்ஸ்ஆப்' வாயிலாகவும், வாங்கும் நபர்கள் 'ராசி' யான எண் எழுதி வந்தால், அதனை மொபைலில் போட்டோ எடுத்துக்கொண்டு, அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்கின்றனர்.பல லட்சம் ரூபாய் பரிசு விழும்; வாழ்க்கை மாறிவிடும் என்ற நம்பிக்கையில், தொழிலாளர்கள், ஏழை குடும்பங்களை சேர்ந்த பலர், லாட்டரி வாங்குகின்றனர். இதனால், பல குடும்பங்கள் வாழ வழியின்றி, லாட்டரி மோசடியால் பாதித்து வருவதோடு, ஏமாற்றத்தால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகிறது.உடுமலை நகரில் மட்டும், நம்பர் லாட்டரி மோசடியில், தினமும் 30 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் நடப்பதாக கூறப்படுகிறது. தனியாக அலுவலகம், கடை அமைத்து, லாட்டரி விற்பனை நடந்தாலும், போலீசார் 'மாமூல்' பெறுவதால், கண்டு கொள்வதில்லை.அரசு தடை செய்தாலும், உள்ளூரில் களைகட்டியுள்ள லாட்டரி விற்பனையை தடை செய்ய, திருப்பூர் எஸ்.பி., மேற்கு மண்டல ஐ.ஜி., ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

குச்சி மிட்டாய்
டிச 23, 2024 06:02

லாட்டரியால் தினமும் யாருயா சாகராங்க, சாராய கடைய மூடுங்ங்க காலத்துக்கும் எவனும் சாக மாட்டான் சாராயக்கடையை மூடுறதுக்கு எதாவது கன்டென்ட் ரெடி பண்ணி தைரியமா போஸ்ட் பண்ணு பாப்போம்


Chandrasekaran
டிச 22, 2024 21:45

ஆங்காங்கே பிடிப்பதும் கோர்ட் அபராதத்துடன் வழக்கு முடிவதும் சடங்கு. ஆன் லைனை திறன் அடிப்படையில் நீதிமன்றம் நோக்குகிறது. அதில் இன்று கூட தாய் மருத்துவ செலவிற்கான பணத்தை இழந்து மகன் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி. இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் குற்றங்கள் குறையாது.


Anandh Kumar
டிச 22, 2024 21:06

எங்கும் நடக்கல


சம்பா
டிச 22, 2024 09:52

எல்லா இடத்திலும் உள்ளது அரசே நடத்தலாம்


புதிய வீடியோ