உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை 45 கோடியாக உயர்வு

ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை 45 கோடியாக உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது சிறப்பு நிருபர்

சென்னை: தெற்கு ரயில்வேயில், கடந்த ஏழு மாதங்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகளில், 45 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். அனைத்து விரைவு ரயில்களிலும் தலா நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகள் என்ற இலக்கை, தெற்கு ரயில்வே விரைவில் எட்டவுள்ளது.தெற்கு ரயில்வேயில், சென்னை உட்பட ஆறு கோட்டங்களில், 727 ரயில் நிலையங்கள் உள்ளன.இதில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில், பயணியரின் வருகை நாளுக்குள் நாள் அதிகரித்து வருகிறது. விரைவு, குறுகிய துார பயணியர் ரயில்கள், மின்சார ரயில்கள் என, 1,400 ரயில்கள் இயக்கப்படுகின்றன.இவற்றில், 21.50 லட்சம் பேர் தினமும் பயணம் செய்து வருகின்றனர். பயணியர் பிரிவு வருமானத்தை முதன்மையாக வைத்து, தெற்கு ரயில்வே செயல்பட்டு வருகிறது.எனவே, கூடுதல் ரயில்கள் இயக்கம், பெட்டிகள் இணைப்பு அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

6 சதவீதம்

குறிப்பாக, முன்பதிவு தேவையில்லாத ரயில்களில், குறைந்த கட்டணத்தில் அதிகமானோர் செல்வதற்கு வசதியாக, அதிக பெட்டிகளை இணைத்து இயக்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் காரணமாக, கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை முன்பதிவு இல்லாத பெட்டிகளில், 45 கோடி பேர் பயணித்துள்ளனர். இதன் வாயிலாக, 1,200 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.இது, அதற்கு முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயை விட, 6 சதவீதம் அதிகம்.பயணியருக்கான வசதியை ஏற்படுத்தி தருவதிலும், கூடுதல் ரயில்கள் இயக்குவதிலும், தொடர்ந்து கவனம் செலுத்தப்படுகிறது.இது குறித்து, தெற்கு ரயில்வேயின் தலைமை வணிக மேலாளர் செந்தில்குமார் அளித்த பேட்டி: இந்திய ரயில்வேயின் மொத்த வருவாயில், சரக்கு பிரிவின் பங்களிப்பு 66.6 சதவீதம், பயணியர் பிரிவின் பங்களிப்பு 27.4 சதவீதம். ஆனால், தெற்கு ரயில்வேயில், பயணியர் பிரிவு வருமானம் 70 சதவீதமாகவும், சரக்கு பிரிவு வருவாய் 30 சதவீதமாகவும் இருக்கிறது. தெற்கு ரயில்வேக்கு பயணியர் பிரிவு வருமானம் தான் உயிர் நாடியாக உள்ளது.எனவே, பயணியருக்கான வசதியை ஏற்படுத்தி தருவதிலும், கூடுதல் ரயில்கள் இயக்குவதிலும், தொடர்ந்து கவனம் செலுத்தப்படுகிறது. நடப்பு நிதியாண்டில், மொத்த பயணியர் எண்ணிக்கை 77.41 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

முதலிடம்

இதில், முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை 66.79 கோடியாக இருக்கும் என நம்புகிறோம். கடந்த ஏழு மாதங்களில் மட்டும், 45 கோடி பேர் பயணம் செய்துஉள்ளனர்.இதற்கு முந்தைய ஆண்டில், இதே காலகட்டத்தில், 44.70 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். அனைத்து விரைவு ரயில்களிலும், தலா நான்கு முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.இதுவரை, 261 முன்பதிவு இல்லாத பெட்டிகளை கூடுதலாக இணைத்துள்ளோம். பயணியர் தேவைக்கு ஏற்ப சிறப்பு ரயில்கள், கூடுதல் பெட்டிகள் இணைப்புகளில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படுகிறது. நாட்டிலேயே தாமதமின்றி ரயில்கள் இயக்குவதில், தெற்கு ரயில்வே முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விரைவில் 'அம்ரித் பாரத்' ரயில்

* தமிழகத்தில் புதிதாக, 'அம்ரித் பாரத்' ரயில் சேவை துவங்கப்பட உள்ளது. இதற்கான வழித்தடம் தேர்வு நடந்து வருகிறது.* சென்னை வேளச்சேரி - பரங்கிமலை மேம்பால ரயில் இணைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, இறுதி கட்ட சோதனை நடந்து வருகிறது. * வரும் ஜனவரி மாதத்துக்குள் பயன்பாட்டிற்கு வரும். புறநகர் மின்சார ரயில் சேவையில் பெரிய மாற்றம் ஏற்படும் சென்னை பரங்கிமலையில் மாநகர பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில், மேம்பால ரயில் வசதிகள் இடம்பெற உள்ளன. * சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்து, பொது போக்குவரத்து இணைப்பு வசதிகளுடன், அந்த பகுதி மாறி வருகிறது. * பயணியர் வருகைக்கு ஏற்ப, வரும் ஆண்டுகளில் விரைவு ரயில்களுக்கும், பரங்கிமலையில் நிறுத்தம் வழங்கும் வாய்ப்பு உருவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Baskar
நவ 17, 2025 15:49

முன் பதிவு இல்லாத பயணம் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஆனது


கனோஜ் ஆங்ரே
நவ 17, 2025 14:31

////கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரை முன்பதிவு இல்லாத பெட்டிகளில், 45 கோடி பேர் பயணித்துள்ளனர். -/// இந்த 45 கோடி பேரில்... எத்தனை பேர் இந்திக்காரனுங்க...? அவன்களில் எத்தனை பேர் டிக்கெட்டு எடுத்து பயணம் செஞ்சாங்க...? இவனுங்க முன்பதிவில்லா பெட்டி விட்டதுக்கு காரணமே... தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள், இந்திக்காரர்கள் ஓசியில பயணம் செய்திடத்தானே...? தமிழ்நாட்டில் இருக்குற, கிராமப்புற மக்கள்கூட.... பாலூர் எனும் கிராம ரயில்வே ஸ்டேசனில் வழியனுப்பவ வருகிற தமிழர்கள்கூட காசு கொடுத்து பிளாம்பாராம் டிக்கெட் எடுத்துதான் உள்ளே போறான்... ஆனால், இந்திக்காரனுங்க ஹௌரா, பஜல்பூல், போபால், பினாய்பூர் போன்ற இந்திக்காரனுங்க ஊருக்கு போற ஒரு இந்திக்காரனுங்ககூட டிக்கெட் எடுத்து பயணம் பண்ணுவதில்லை... அதுகூட பரவாயில்ல... ரிசர்வ் செய்த 3ம், 2ம் வகுப்பு ஏசி பெட்டியில, டிக்கெட் எடுத்து பயணம் செய்யுறவன் தலைமாட்ல குரங்குமாதிரி கூத்த வச்சி உட்கார்ந்து டிக்கெட் இல்லாம ஓசியில பயணம் செய்யுது இந்த காட்டுமிராண்டி இந்திக்கார கூட்டம். இதுக்கு எப்பய்யா விடிவு...? கேள்வி கேட்டா... “நம்மிள்கி டிக்கெட் எடுக்கல... அதுமாதிரி நீயும் டிக்கெட் எடுக்காம பயணம் செய்யுன்னு... சொல்லுது அந்த இந்திக்கார கம்முனாட்டி...


Ramesh Sargam
நவ 17, 2025 11:08

மக்கள்தொகை கட்டுப்படுத்த படாவிட்டால் ரயிலில் மட்டுமல்ல, விமானதிலும் முன்பதிவு செய்யாமல் கடைசி நேரத்தில் டிக்கெட் வாங்கி பயணிக்கும் நாள் வரலாம். Unreserved Flights will be introduced soon.


திகழ்ஓவியன்
நவ 17, 2025 12:30

இதெற்க்கெல்லாம் நேரு தான் காரணம் , இன்னும் ரயில் தண்டவாளங்கள் அமைத்து இருக்கணும் , ஏர்போர்ட் நிறைய கட்டி இருக்கனும் அனால் என்ன அமைத்து இருந்தாலும் இந்த அரசு விற்று ஸ்வாஹா பண்ணி இருக்கும்


KRISHNAN R
நவ 17, 2025 10:06

எங்கேயும் எப்போதும் நோ. ... டிக்கெட்


chennai sivakumar
நவ 17, 2025 10:02

சனத்தொகை உயர்வும் காரணம். Without கேஸ் நிறைய


Ramesh Trichy
நவ 17, 2025 09:45

சென்னையை தவிர மற்ற நகரங்களையும் கவனிக்கவும் , வேலைவாய்ப்பை Trichy மதுரை போன்ற நகரங்களுக்கும் விரிவு படுத்த வேண்டும் .


AMMAN EARTH MOVERS
நவ 17, 2025 09:13

அதிலயும் அவங்க டிக்கெட் எடுக்காமதான் போவாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை