தாட்கோ திறன் மேம்பாட்டு பயிற்சி பயனாளிகள் எண்ணிக்கை 51 சதவீதம் சரிவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
'தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், தாட்கோ சார்பில் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சி, 51 சதவீதம் குறைந்துள்ளது' எ ன, குற்றச்சாட்டு எழுந்து உ ள்ளது.'தாட்கோ' எனப்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, 'ட்ரோன்' இயக்குதல், அழகு கலை, ஹோட்டல் நிர்வாகம் என, 10க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது.இதில் சேர, பெற்றோரின் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த, ஆண்டுதோறும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்நிதி முழுமையாக செலவிடப்படுவதில்லை.
விண்ணப்பம் கேட்டால் விரட்டுகின்றனர்
துாத்துக்குடியில் தாட்கோ பயிற்சி குறித்து, இளைஞர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மாறாக, நாங்களே விசாரித்து கேட்பதற்குள், விண்ணப்பங்கள் முடிவடைந்து விட்டன என, விரட்டுகின்றனர்.- கோபி, பாதிக்கப்பட்டவர், துாத்துக்குடி- நமது நிருபர் -