மத்திய அரசில் ஓ.பி.சி., காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: முதல்வர்
சென்னை: மத்திய அரசில் காலியாக உள்ள எஸ்.சி., மற்றும் ஓ.பி.சி., காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.டில்லியில் நடந்த சமூக நீதி மாநாட்டில் காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட மக்கள், மகளிர் முன்னேற்றத்தை பா.ஜ., அரசு விரும்பவில்லை. சமூக நீதியை பின்பற்றவில்லை. சமூக ரீதியாக கல்வி ரீதியாக புறக்கணிக்கப்பட்டவர்களை கைதூக்கி விடுவதே சமூக நீதி. மத்திய அரசில் காலியாக உள்ள ஓ.பி.சி., எஸ்சி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.சமூக நீதி, சமதர்ம இந்தியாவை உருவாக்க நாம் இணைந்து போராட வேண்டும். சமூக நோய்களை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூக நீதி. தமிழகத்தை பார்த்து பல்வேறு மாநிலங்களும் சமூக நீதியை பின்பற்றுகின்றன. நாடு முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். நாடு முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.