உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

ரூ.1,500 லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது

கடலுார்: ரூ.1,500 லஞ்சம் வாங்கிய புவனகிரி வட்டார காலை உணவுத்திட்ட மேற்பார்வையாளர் செந்தமிழ்ச்செல்வியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம் திருமுட்டம் தாலுகா கானுரை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வி, மேல்புவனகிரி வட்டார இயக்க மேலாளராக உள்ளார்.இந்நிலையில், கடலுார் மாவட்டம் புவனகிரி தாலுகா மஞ்சக்கொல்லை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி காலை சமையல் பொறுப்பாளராக உள்ள செளந்தர்யா,25 கடந்த ஜன.9 ம் தேதி பணியில் இருந்த போது, கடலுார் மாவட்ட ஆய்வுக்குழு துணை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.அந்த ஆய்வில், துவக்கப்பள்ளிக்கு விநியோகிக்கப்பட்ட சேமியாவின் அளவு தவறுதலாக குறைவாக இருப்பதை காரணம் காட்டி மேல்புவனகிரி வட்டார இயக்க மேலாளர் செந்தமிழ்செல்வி, வேலையை விட்டு நீக்காமல் இருக்க செளந்தர்யாவிடம் ரூ.2ஆயிரம் லஞ்சம் கேட்டார். பின்னர் அவரின் வேண்டுகோளின்படி, ரூ.1,500 குறைத்து கேட்டார்.இந்நிலையில் செளந்தர்யா, லஞ்சம் கொடுக்க விரும்பாமல் கடலுார் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் செந்தமிழ்செல்வி மீது புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று செளந்தர்யாவிடமிருந்து ரூ.1,500 லஞ்சப்பணத்தை செந்தமிழ்செல்வி கேட்டு வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், செந்தமிழ்செல்வியை கைது செய்தனர். அதை தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அவரது வீட்டிலும் சோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mayakannan Kannan
பிப் 05, 2025 20:05

சிறையில் கக்கூஸ் கழுவ சொல்லுங்கள்


R. THIAGARAJAN
பிப் 01, 2025 19:14

குற்றம் செய்ய யாரும் பயப்படுவதில்லை தங்களது குற்றங்கள் வெளியே தெரியக்கூடாது என்பதில் மட்டுமே பயப்படுகிறார்கள் நீதியின் தீர்ப்பு மட்டுமே உணர்த்தும் ???? ???? ????


கோமாளி
பிப் 01, 2025 08:09

1500 லஞ்சத்தை சரியாக பிடிப்பவர்கள் 1500கோடிகளை விட்டுவிடுகிறார்கள்


VENKATASUBRAMANIAN
பிப் 01, 2025 07:01

பாவம் இவர் மாட்டிக்கொண்டார். திமிங்கிலங்கள் உள்ளன. அவர்களை பிடிக்க வேண்டும்


Mani . V
பிப் 01, 2025 05:50

இதையெல்லாம் என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?


Bhaskaran
பிப் 01, 2025 05:27

கழுத்தில் போட்டிருக்கும் பத்துப் பவன் வடசங்கிலி இவரது வருமானம் பற்றிச்சொல்கிறது இவனுங்களுக்கு ஆதரவாக ஜாக்டோ ஜியோ குரல் கொடுப்பார்கள்


Matt P
பிப் 01, 2025 00:10

எல்லோரும் அவரவர் விருப்பத்துக்கு வாழ்கிறார்கள். எப்படி வாழ்ந்தாலும் கேவலம் என்று வருகிறபோது பாதிக்கப்பட்டவர்கள் மனது பாதிக்கப்பட தான் செய்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து தேவைக்கு செலவழித்து, சேமித்து வாழும் இன்பத்தையும் நினைத்து பார்த்து வாழலாமே. மாசா மாசம் லஞ்சபணம் அவர்கள் ஆட்சியைத்தக்க வைக்க கொடுக்கப்படுகிறதே பெண்களுக்கு அதுவும் ஏதோ ஒரு வகையில் லஞ்சம் தான் என்றுப்படுகிறது. மேல் மட்டம் உட்பட எல்லோரும் தவறு செய்கிறார்கள் நாமும் நமக்கு தகுந்தாற்போல் தவறு செய்வோம் என்றால் நல்லதோ கெட்டதோ அனுபவித்து தான் ஆக வேண்டும். கடவுள் நம்பிக்கை இருந்தால் கட்டுப்பாடும் ஒழுக்கமும் ஏற்படும்


புதிய வீடியோ