உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிகாரிகள் புகைப்படம், முகவரி நீர்வளத்துறை வெப்சைட் புதுமை

அதிகாரிகள் புகைப்படம், முகவரி நீர்வளத்துறை வெப்சைட் புதுமை

சென்னை; நீர்வளத்துறைக்கு, www.wrd.tn.gov.inஎன்ற முகவரியில், தனி இணையதளம் உள்ளது. இதில், துறை குறித்த வரலாறு, அலுவலக அமைப்பு, திட்டங்கள், துறை வழங்கும் சேவைகள், பாசன கட்டமைப்புகள், ஆறுகள், வடிநில அமைப்புகள் உள்ளிட்ட விபரங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, அணைகள், ஏரிகளில் உள்ள நீர்இருப்பு நிலவரம் குறித்த விபரங்களும் வெளியிடப்படுகின்றன. நீரியல் தொடர்பான உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்களுக்கும் இந்த இணையதளம் வாயிலாக, பல்வேறு தகவல்கள் கிடைத்து வருகின்றன.இந்நிலையில், இணைய தளத்தில் முதல்வர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புகைப்படங்கள் மட்டுமின்றி, துறை செயலர், கூடுதல் செயலர்கள், முதன்மை தலைமை பொறியாளர், மண்டல பொறியாளர்கள் குறித்த விபரங்களும், அவர்களின் புகைப்படங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன. அவர்களை தொடர்பு கொள்வதற்காக, தொலைபேசி எண்கள், இ - மெயில் முகவரி உள்ளிட்ட விபரங்களும் உள்ளன. இதனால், நீராதார பிரச்னை கள் தொடர்பாக, அதிகாரிகளை விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எளிதாக அணுகும் சூழல் உருவாக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி