உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரோந்து பணிக்கு தனியாக செல்லாதீங்க:போலீசாருக்கு அதிகாரிகள் அட்வைஸ்

ரோந்து பணிக்கு தனியாக செல்லாதீங்க:போலீசாருக்கு அதிகாரிகள் அட்வைஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பிரச்னைகள் நடக்கும் இடங்களுக்கு, போலீசார் தனியாக ரோந்து செல்லக்கூடாது' என, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.ரவுடிகள் ஒழிப்பு மற்றும் குற்றத்தடுப்பு பணிகளில் ஈடுபடும் போலீசாரை, தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.திருப்பூர் மாவட்டம் சிக்கனுாத்து கிராமத்தில், சிறப்பு எஸ்.ஐ., படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின், மாநிலம் முழுதும் போலீஸ் ரோந்து பணிகளை சீரமைக்கும் நடவடிக்கையில், கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் மண்டல ஐ.ஜி.,க்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் உள்ள, 1,321 சட்டம் - ஒழுங்கு காவல் நிலைய எல்லைகளில், அடிக்கடி குற்றங்கள் நடந்த இடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.இதன் வாயிலாக, ரவுடிகள், கூலிப்படையினர், பழைய குற்றவாளிகள் வசிக்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. அடிக்கடி குற்றங்கள் நடந்த இடங்களில், போலீஸ் ரோந்து எண்ணிக்கையை அதிகப்படுத்தி உள்ளோம். மாவட்டம் மற்றும் மாநகரங்களில், 24 மணி நேரமும் பொது மக்களின் பார்வையில் தெரியும்படி, போலீஸ் ரோந்து பணிகளில் சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. ரோந்து போலீசார், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், வங்கிகள், பூட்டி கிடக்கும் வீடுகள், முக்கிய பிரமுகர்கள், தனியாக வசிக்கும் மூத்த குடிமக்கள் வீடுகள் முன் படம் எடுத்து, உயர் அதிகரிகளுக்கு அனுப்ப வேண்டும் முக்கியமான சந்திப்புகளில் ஒளிரும் விளக்குடன், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும்போலீஸ் ரோந்து பணிகளை, இணை, துணை, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆய்வு செய்ய வேண்டும்ரோந்து பணியில் குளறுபடிகள் இருந்தால், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்இரவு நேரங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில், குற்றங்களே நடக்கவில்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில், ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்உளவு போலீசாரின் தகவல்களை அலட்சியம் செய்யக்கூடாதுஎக்காரணத்தை முன்னிட்டும், பிரச்னைக்குரிய இடங்களுக்கு தனியாக ரோந்து செல்லக்கூடாது. சைக்கிள் ரோந்துக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்திருச்சி ராம்ஜி நகர் போன்ற குற்றம் அதிகம் நடக்கும் இடங்களில், துப்பாக்கியுடன் போலீஸ் அதிகாரிகள் நடை ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும்துப்பாக்கி மற்றும் லத்தி இன்றி ரோந்து பணிகளில் ஈடுபடக் கூடாது. இப்படி பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Venkatasubramanian krishnamurthy
ஆக 08, 2025 21:38

காவல்துறையே இப்படி அலறுகிறதென்றால் மாநிலம் கெட்டு கிடக்கு. காவல் துறையினர் உயிருக்காக உஷாரா இருக்கணும்னு சொல்றதிலேயும் தமிழ்நாடு திராவிட மாடல் நெ:1தான்.


bharathi
ஆக 08, 2025 17:40

Better to be in lock up while on duty to prevent from political goons


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 08, 2025 12:32

மந்திரிகள் எம்எல்ஏக்கள் ஜ ஏ எஸ் அதிகாரிகள் அவர்களுக்கும் இதே அறிவுரை தானா. தமிழகம் இந்தியாவில் நெம்பர் ஒன் மாநிலம். தமிழகத்தை பார்த்து தான் ட்ரம்ப் கூட வரிகளை உயர்த்தி அமெரிக்கா மக்களை மகிழ்ச்சியாக வைத்துள்ளார்.


தமிழன்
ஆக 08, 2025 12:19

ரவுடிகளுக்கு புரியும் மொழியில் பேச காவலர்களுக்கு சொல்லி கொடுக்க போறாங்களா


Padmasridharan
ஆக 08, 2025 11:48

தனியா போனா ஒரு வசூல் கூட்டணியா போனா ஒரு வசூல், அப்படித்தானே இவங்க வர்றாங்க. இத்தனைக்கு கூட வந்தவர விட்டுட்டு ஓடிப்போன காவலர், அவருடைய வீட்டு நபர்களுக்கு நடந்தா இப்படி செய்வாரா.


theruvasagan
ஆக 08, 2025 11:02

போலீஸ்கார் தனியா வெளியில போகாதீங்க கூட்டமாகவும் போகாதீங்க. பொதுமக்களே தப்பித்தவறி கூட வெளியில கால் வைக்காதீங்க. அப்புறம் உங்க உசுருக்கு நாங்க உத்திரவாதம் இல்லை. உங்க பாதுகாப்புக்கு இதைவிட. சிறப்பாக எந்த கொம்பனாலும் செய்யமுடியாது. இங்கே நம்பர் ஒன் ஆட்சி நடக்குதுன்னு நம்பதாவனெல்லாம் ரத்தம் கக்கி சாவான்.


Barakat Ali
ஆக 08, 2025 09:25

செய்தியைப் படிச்சு எனக்கு சிரிப்பு வரலை... என் மாநிலம் இப்படி நாசமா போச்சே ன்னு வேதனையா இருக்குது.. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சிரிச்சு, கேவலப்பட்டு நிக்கிது... பாவம் மக்கள் ... எந்த அறிவாலய கொத்தடிமையும் கூச்சப்பட்ட மாதிரியே தெரியல ....


Rajasekar Jayaraman
ஆக 08, 2025 09:01

போலீசுக்கு பாதுகாப்பு இல்லை தமிழக சட்டம் ஒழுங்கு மிக அருமையாக உள்ளது எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது.


தமிழன்
ஆக 08, 2025 08:49

போலீசே தனியாக போக கூடாது என்றால் பொது மக்கள்.. சிறு குழந்தை முதல் முதுமை மக்கள் வரை தனியாக போவது பாதுகாப்பை தரவேண்டும் அதுவே நல்ல ஆட்சிக்கு அடையாளமாக கருத்துக்கிறேன்


Jack
ஆக 08, 2025 08:48

மந்தரிச்ச தாயத்து அணிந்து ரோந்து பணிக்கு செல்லுமாறு அறிவுறுத்தலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை