உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணி ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகை

வாக்காளர்கள் கணக்கெடுப்பு பணி ஆய்வு செய்ய அதிகாரிகள் வருகை

சென்னை:தேர்தல் கமிஷன் உத்தரவுபடி, தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் துவங்கி உள்ளன. முதல் கட்டமாக வீடுதோறும் வாக்காளர் கணக்கீட்டு படிவம் வினியோகிப்பது, டிசம்பர் 4ம் தேதி வரை நடக்க உள்ளது. மாநிலத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும், கணக்கீட்டு படிவங்களை ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வினியோகித்து, பூர்த்தி செய்த படிவங்களை சேரிக்க உள்ளனர். இதற்காக, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளான கலெக்டர்கள், தங்கள் மாவட்டங்களில் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை கள ஆய்வு செய்ய உள்ளனர். இந்நிலையில், துணை தேர்தல் கமிஷனர் பானு பிரகாஷ் எத்துரு, இயக்குநர் கே.கே.திவாரி ஆகியோர் தமிழகம் வந்துள்ளனர். மாநிலம் முழுதும் நடக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த கணக்கெடுப்பு படிவம் வினியோகம் தொடர்பாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்டோருடன், நேற்று ஆலோசனை நடத்தினர். இன்று மாவட்டங்களுக்கு நேரில் சென்று, கணக்கெடுப்பு படிவம் வினியோக பணியை கள ஆய்வு செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி