உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பாடா...! மீண்டும் சரிந்தது தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.640 குறைவு

அப்பாடா...! மீண்டும் சரிந்தது தங்கம் விலை; 2 நாட்களில் சவரனுக்கு ரூ.640 குறைவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு, 520 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 56,560 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு ரூ.65 குறைந்து, ரூ.7,070க்கும் விற்பனை செய்யப்படுகிறது.தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம், புது வருட பிறப்பு ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் விரும்புகின்றனர். தங்க நகை கடைகளில் விற்பனையும் சற்று அதிகரித்து உள்ளது. நேற்று, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 120 ரூபாய் குறைந்தது. அதன் படி ஒரு கிராம் ரூ.15 குறைந்து, ரூ.7,135க்கும், சவரன் 120 ரூபாய் குறைந்து ரூ.57,080க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று (டிச.,19) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு, 520 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 56,560 ரூபாய்க்கும், ஒரு கிராமுக்கு ரூ.65 குறைந்து, ரூ.7,070க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் ஒரு சவரனுக்கு, ரூ.640 சரிந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கடந்த 10 நாட்களாக (டிச.9 முதல் டிச.19) நிலவிய தங்கம் விலை விவரம் வருமாறு;டிச.9 - ரூ.57,040டிச.10 - ரூ.57,640டிச.11 - ரூ. 58,280டிச. 12 - ரூ.58,280டிச. 13 - ரூ. 57,840டிச.14 - ரூ. 57,120டிச.15 - ரூ. 57,120டிச.16 - ரூ. 57,120டிச.17 - ரூ. 57,200டிச.18- ரூ. 57,080டிச.,19 (இன்று)- ரூ.56,560


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

SUBRAMANIAN P
டிச 19, 2024 15:52

அடப்போப்பா, நா தங்கத்த கண்ணால பாத்தே பத்து வருஷம் ஆகுது..


Narayanan
டிச 19, 2024 15:47

நகைக்கடை பக்கம் போகாதீர்கள் நண்பர்களே . தங்கத்தை சாப்பிடட்டும் நகை வியாபாரிகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை