உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழைய அரசு பஸ்கள் மேலும் ஓராண்டு இயங்க அனுமதி

பழைய அரசு பஸ்கள் மேலும் ஓராண்டு இயங்க அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பதினைந்து ஆண்டுகளை கடந்துள்ள வாகனங்களை, கடந்த ஆண்டு ஏப்ரல் 1க்கு பின் பயன்படுத்த, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தடை விதித்தது. மேலும், இந்த வகை வாகனங்களுக்கான பதிவுச்சான்றை, 'வாகன்' இணையதளம் வாயிலாக ரத்து செய்தும் நடவடிக்கை எடுத்தது.இருப்பினும், அத்தியாவசிய சேவைகள் தடைபடுவதை தடுக்கும் வகையில், 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை மேலும் ஓராண்டு பயன்படுத்த, தமிழக அரசு அனுமதி வழங்கியது. அந்த அனுமதி வரும் 30ம் தேதியுடன் முடிகிறது. இந்நிலையில், மேலும் ஓராண்டு பயன்படுத்த அனுமதித்து, தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் அரசாணை வெளியிட்டுள்ளார்.அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:மாநிலத்தில், 15 ஆண்டுகளுக்கு மேலாக 6,247 அரசு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்யும்பட்சத்தில், ஏராளமானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.எனவே, அரசு பஸ்கள் உட்பட அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான 15 ஆண்டுகளுக்கு மேலான 6,247 வாகனங்களுக்கு வரி, கட்டணம் போன்றவற்றை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேரடியாக வசூலித்து, பதிவுச்சான்றை புதுப்பித்து வழங்கலாம். அந்த வாகனங்களின் பதிவுச்சான்று செல்லுபடியாகும் காலத்தை, அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Saai Sundharamurthy AVK
செப் 28, 2024 12:34

ஒன்றுமில்லை ! ஒரு தடவை ஒரு ஊரில் அங்கிருந்த பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். ஒரு வெள்ளைக்கார சுற்றுலா பயணி என்னிடம் வந்து சில விஷயங்களை பற்றி கேட்டார். நானும் அதற்கு பதில் அளித்துக் கொண்டிருந்தேன். " Our State Tamilnadu is the No.1 State in India " என்று பெருமையாக கூறினேன். உடனே பக்கத்தில் நின்று கொண்டிருந்த நமது தமிழக அரசின் டவுன் பஸ்ஸை ஒருமுறை ஏற இறங்க பார்த்து விட்டுப் போனார் பாருங்கள் !!!! எனக்கு வியர்வை கொட்டி விட்டது.


ஆரூர் ரங்
செப் 28, 2024 11:03

இதில் மூணு பஸ்ஸை லெபனானுக்கு அனுப்பி அங்குள்ள தமிழர்களை மீட்க வேண்டும்.


Saai Sundharamurthy AVK
செப் 28, 2024 10:13

15 ஆண்டுகள் என்பதை 10 ஆண்டுகள் என்று குறைக்கப்பட வேண்டும். அப்போது தான் உருப்படியான பேருந்து நடமாட்டம் இருக்கும்.


சுந்தரம் விஸ்வநாதன்
செப் 28, 2024 09:35

தமிழ்ப் பேணக்கால் ரொம்பவும் தைரிய சாலிகள். புற நானூற்றில் முறத்தால் புலியை விரட்டியதாக இருக்கிறது அப்பேர்ப்பட்ட பெண்கள் தமிழக அரசு பஸ் களில் பயணம் செய்ய உயிருக்கு பயந்தவர்கள் அல்ல.


பேசும் தமிழன்
செப் 28, 2024 09:27

அதிகமான பயன்பாட்டில் இருக்கும் அரசு வாகனங்கள் இயங்கினால்.... குறைவான பயன்பாடு கொண்டு தனியார் வாகனங்கள் ஏன் இயங்க கூடாது ???? ஒரு கண்ணில் வெண்ணெய்... ஒரு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது போல இருக்கிறது.


RAMAKRISHNAN NATESAN
செப் 28, 2024 09:18

இன்னும் மக்கள் தொகையைக் குறைக்க திராவிட மாடல் முயற்சி செய்கிறதோ ????


N Srinivasan
செப் 28, 2024 08:19

ஒரு வருஷம் என்ன வச்சிக்கோங்க இன்னும் ஒரு வருஷம் 2026 வரை அப்படியே புதுசு வாங்காமல் ஓடி விடலாம்


krishnamurthy
செப் 28, 2024 08:17

மக்கள் உயிர் என்னாவது


Kasimani Baskaran
செப் 28, 2024 06:51

நடமாடும் கொலைக்களங்கள் சேவையில் இருந்து நீக்கப்பட வேண்டும்.


Tiruchanur
செப் 28, 2024 06:18

புது பஸ் வாங்க துப்பில்லை. காசில்லை. இருக்கிறதை மாசத்துக்கு 1 கோடி பெண்களுக்கு தலா ₹1000 குடுத்து பாழடிச்சுட்டு இப்ப "வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாம்". திருட்டு the vidiyal த்ராவிட ஆட்சி. என்னமா சப்பைக்கட்டு காட்றாங்க பாருங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை