உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆம்னி பஸ் பறிமுதல் ரூ.1.75 லட்சம் அபராதம்

ஆம்னி பஸ் பறிமுதல் ரூ.1.75 லட்சம் அபராதம்

திண்டுக்கல்:முறையான தகுதிச்சான்று, ரோடு வரி செலுத்தாமல் மதுரையிலிருந்து பெங்களூருவிற்கு பயணிகளை ஏற்றி வந்த ஆம்னி பஸ்சை திண்டுக்கல் அம்மைநாயக்கனுார் அருகே போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு வழியாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் அதிகளவிலான ஆம்னி பஸ்கள் முறையான ரோடு வரி, தகுதிச்சான்று உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லாமல் செல்வதாக திண்டுக்கல் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று பறக்கும் படை மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் அம்மைநாயக்கனுார்அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாகலாந்தை சேர்ந்த ஆம்னி பஸ் ஒன்று மதுரையிலிருந்து பெங்களூருசெல்வதற்காக பயணிகளை ஏற்றி வந்தது. அதிகாரிகள் அந்த பஸ்சை மடக்கி சோதனை செய்ததில் தகுதிச்சான்று, ரோடு வரி உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் இல்லாதது தெரிந்தது. உடனே அதிகாரிகள் அந்த பஸ்சை பறிமுதல் செய்து ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து அதிலிருந்த பயணிகளை இறக்கி வேறு பஸ்சில் அவர்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ