உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி ஆவணத்தோடு ஆம்னி பஸ்:ரூ.10 லட்சம் அபராதம்

போலி ஆவணத்தோடு ஆம்னி பஸ்:ரூ.10 லட்சம் அபராதம்

திண்டுக்கல்:ஹைதரபாத்திலிருந்து மதுரை வந்த ஆம்னி பஸ் போலியான ஆவணங்களோடு கொடைரோடு டோல்கேட்டில் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் சிக்கியநிலையில் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு பஸ்சும் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் வழியாக பல மாநிலங்கள்,மாவட்டங்களிலிருந்து ஆம்னி பஸ்கள் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்கின்றன. இவைகளில் அதிகமான ஆம்னி பஸ்கள் முறையான ஆவணங்களின்றி இயக்கப்படுவதாக திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து நேற்று பறக்கும் படை அதிகாரி சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் கொடைரோடு டோல்கேட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹைதரபாத்திலிருந்து மதுரை நோக்கி 30க்கு மேலான பயணிகளுடன் வந்தது. அதிகாரிகள் அதில் உள்ள டிரைவர்,கண்டக்டர்களிடம் உள்ள ஆவணங்களை சரிபார்த்தனர். அதில் பயணிகள்படுத்து செல்லும் வகையிலான சீட் இருப்பதை 2016லிருந்து மறைத்து அமர்ந்து செல்லும் வகையிலான சீட்கள் என போலியானஆவணங்களை தயாரித்து பயன்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் அதை கண்டறிந்து ரோடு வரிகள் செலுத்தாதது உட்பட பல்வேறுபிரச்னைகளுக்காக ரூ.10 லட்சம் அபராதம் விதித்து பஸ்சையும் பறிமுதல் செய்தனர். அதில் வந்த பயணிகளை பத்திரமாக வேறு பஸ்சில் மதுரைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

ديفيد رافائيل
நவ 05, 2024 21:08

"பாதி வழியிலேயே passenger இறக்கி விடப்பட்டனர்" இதுக்கு தான் நாம் TNSTC/SETC bus i use பண்ணுவேன்.


நிக்கோல்தாம்சன்
நவ 05, 2024 20:13

திடீரென முளைத்த காளான்களான மர்ம நபர்களின் பேருந்துகள் எந்த சிக்கலும் டாக்குமெண்டும் இல்லாம ஓடினாலும் செக் பண்ண யாரும் முன்வரமாட்டாங்க ?


Smba
நவ 05, 2024 18:13

ஏவாரம் நல்லபடியா முடியும்


முக்கிய வீடியோ