உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒருபுறம் சுவாமி தரிசனம்; மறுபுறம் எதிர்ப்பு திருநீறு அழித்து திருமாவளவன் நாடகம்; ஹிந்து மக்கள் கட்சி கண்டனம்

ஒருபுறம் சுவாமி தரிசனம்; மறுபுறம் எதிர்ப்பு திருநீறு அழித்து திருமாவளவன் நாடகம்; ஹிந்து மக்கள் கட்சி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: திருப்பரங்குன்றத்தில் சுவாமி தரிசனம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'செல்பி' எடுப்பதற்காக நெற்றியில் இருந்த திருநீற்றை அழித்ததற்கு ஹிந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.மதுரையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் சோலைகண்ணன் கூறியதாவது: நெற்றியில் வைத்த திருநீற்றை கோயில் வளாகத்தில் வேண்டுமென்றே அழித்தது முருக கடவுளை இழிவுபடுத்துவதாக உள்ளது. 'திருநீற்றை ஏன் அழித்தீர்கள்' என்று திருமாவளவனிடம் கேட்டால், '6 மணி நேரமாக நெற்றியில் இருந்தது. அதனால் அழித்தேன்' என்று தவறான விளக்கம் அளித்துள்ளார். கோயிலுக்குள் 6 மணி நேரமாகவா இருந்தார். பொய் சொல்வதற்கு ஒரு அளவு வேண்டாமா.திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தின்போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது முருகனை தரிசிப்பது போல் தரிசித்து விட்டு திருநீற்றை அழித்துள்ளார். பிறகு சிக்கந்தர் பள்ளிவாசல் தர்ஹாவிற்கு சென்று விட்டு மலை விவகாரத்தை பற்றி பேச என்ன காரணம். 'சனாதனத்தை ஒழிப்போம், மதச்சார்பின்மையை காப்போம், கோயில் கோபுரத்தில் இருப்பதெல்லாம் ஆபாச பொம்மைகள். நாங்கள் கடவுள் மறுப்பாளர் ஈ.வெ.ரா., வாரிசு' என்று மார்தட்டி கொண்டு ஹிந்து மத நம்பிக்கைக்கும், சனாதன தர்மத்திற்கும் எதிராகவும் பேசிவரும் திருமாவளவனுக்கு திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் என்ன வேலை.ஒருபக்கம் முருகன் கோயிலில் சுவாமி கும்பிடுவது, மறுபக்கம் முருகபக்தர்கள் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசுவது. யாரை ஏமாற்ற நாடகம் போடுகிறார். அதேபோல் சினிமா இயக்குனர் அமீருக்கு முருகபக்தர்கள் மாநாட்டை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

suresh Sridharan
ஜூன் 22, 2025 09:05

இவன் எதற்கு கோவிலுக்கு வருகிறார் மூட ஜென்மம்


kamal 00
ஜூன் 21, 2025 22:28

அதான் அவுங்க அடிப்பாங்கன்னு பயந்து,,,, இல்லை அங்கிஸ் அறைவார்கள்ன்னு,,,,, இல்லை இல்லை திமுக சோறு போட மாட்டாங்கன்னு அழிச்சுட்டாப்ல.,.. தேர்தல் ல கொட்ட உடையும் மாப்பிள்ளை


theruvasagan
ஜூன் 21, 2025 22:15

தாறுமாறா பேசினவங்களையும் தலைவணங்க வைக்கும்ஆன்மிக சக்திதான் சனாதனம்.


பேசும் தமிழன்
ஜூன் 21, 2025 19:42

இவரை போன்ற போலி வேடதாரியை தேர்ந்தெடுத்த..... சிதம்பரம் மக்களை சொல்ல வேண்டும்.


sasidharan
ஜூன் 21, 2025 15:52

இவர் மாதிரி ஆட்களை எல்லாம் மக்கள் ஏன் தேர்ந்து எடுத்தார்கள் என்று தெரியவில்லை


Anand
ஜூன் 21, 2025 14:36

திருப்பதிக்கு சென்று .... காலில் விழுந்தது போல என சொலவடை உண்டு.. இவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ஹிந்துவின் நிலை .


venugopal s
ஜூன் 21, 2025 14:01

அவர் நெற்றியில் அவர் எப்போது வேண்டுமானாலும் விபூதி இட்டுக் கொள்வார், நாமமும் இட்டுக் கொள்வார், அதை அழித்தும் கொள்வார். அது அவர் விருப்பம், இதில் மற்றவர்கள் தலையிட உரிமை இல்லை!


SUBBU,MADURAI
ஜூன் 21, 2025 21:05

வேணு இத்தனை நாள் உங்களை ஒரு அறிவாலய அடிமை என்று நினைத்து கொண்டிருந்தேன் இப்பதான் தெரியுது நீங்க ஒரு சிறுத்தைக் குட்டி என்று...


angbu ganesh
ஜூன் 21, 2025 14:00

இவன் ஒரு மன நோயாளி


தஞ்சை மன்னர்
ஜூன் 21, 2025 13:27

:: தலைவர் சோலைகண்ணன்"" இது எல்லாம் ஒரு தலைவரு கொசுத்தொல்லை தங்க முடியாளப்ப சாமி


Karthik Madeshwaran
ஜூன் 21, 2025 12:56

எப்படியாவது மத கலவரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள பாஜக கட்சியினர் துடியாய் துடிக்கிறார்கள். பாவம். தமிழ்நாட்டில் அது நடக்க வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டு மக்கள் நன்கு அரசியல் புரிதல் உள்ளவர்கள். கோவிலுக்கும் செல்வோம். சர்ச்க்கும் செல்வோம், ரம்ஜான் பிரியாணியும் வாங்கி சாப்பிடுவோம். அரசியல் வேறு, மத நம்பிக்கை வேறு என்பதை ஆழமாக உணர்ந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். பருப்பு வேகாது.


pat155
ஜூன் 21, 2025 19:54

உங்களோட கருத்தை பார்த்தாலே நல்லா தெரியுது.. நீங்கபிரியாணி வாங்கியும் சாப்பிடுவீங்க...ரொட்டி துண்டு கூட விடமாட்டீங்க...


kamal 00
ஜூன் 21, 2025 22:30

காசு குடுத்து வாங்கி சாப்பிடனும் கொத்தடிமையே..... மத கலவரம் பண்றதே உங்க மாமாங்க தான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை