உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழந்தைகள் தலையில்

குழந்தைகள் தலையில்

3 லட்சம் ரூபாய் கடன் சுமை

கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க., தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், 1.25 லட்சம் ரூபாய் கடனோடு பிறப்பதாக தெரிவித்து, அதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்த பின், கடனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 4.85 லட்சம் கோடி ரூபாயாக இருந்த, தமிழக அரசின் கடன் தொகை, தி.மு.க., ஆட்சி முடிவில் 9.29 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியம், அரசு போக்குவரத்துக் கழகங்கள், இதர பொதுத்துறை நிறுவனங்களையும் சேர்த்தால், கடன் தொகை 15 லட்சம் கோடி ரூபாய் அளவை தொடும் நிலையில் உள்ளது. தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், 3 லட்சம் ரூபாய் கடனோடு பிறக்கிறது. -- பன்னீர்செல்வம் முன்னாள் முதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
மே 14, 2025 09:42

தென் தமிழ்நாட்டில் வசிக்கும் விஞ்ஞானியின் சொந்த கருத்து ... த மிழ்நாட்டின் கடன் சுமை மிக வலுவாகவும் தாங்கமுடியாத தன்மையுடனும் இருக்கிறது ஆளும் கட்சிகளும் போட்டிபோட்டு கடன் வாங்கியதுதான் காரணம் காய்ச்சல் வந்தால் கசப்பு மருந்து சாப்பிடத்தான் வேண்டும். 1 அரசு பேருந்துகளை தனியாருக்கு விற்கவேண்டியது 3000 கோடி 2 அரசின் நட்டத்தில் இயங்கும் கார்பொரேட்களை ஹனியானுற்க்கு விற்கலாம் 20000 கோடி 3 அரசின் தேயிலை தோட்டம், போரெஸ்ட் நிலங்கள் விற்பதன் மூலம் 40000 கோடி பின்னர் அத்தியாவசிய துறைகள் தவிர மற்ற துறைகளில் கடுமையான ஆட்கள் குறைப்பு இதனால் சுமார் 60000 கோடி பணம் கிடைக்கலாம். இதனால் பத்தி கடன் சுமை அதற்கான வட்டி குறையும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை