உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

நவம்பர் 11, 1943மத்திய பிரதேச மாநிலம், பர்வானியில், புருஷோத்தம் ககோட்கர் - கமலா தம்பதியின் மகனாக, 1943ல், இதே நாளில் பிறந்தவர் அனில் ககோட்கர்.இவர், பர்வானியில் பள்ளிப் படிப்பை யும், மும்பை ரூபாரேல் கல்லுாரியில், இயந்திரவியல் பொறியியலையும் முடித்தார். மும்பை, பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்து, 'துருவா' அணு உலையை வடிவமைத்தார். அமைதிக்கான அணுசக்தி சோதனை குழுவில் பங்கேற்றார். கைவிடுவதாக இருந்த, சென்னை கல்பாக்கம் அணு உலையை மீட்டார். கடந்த, 1996ல், பாபா அணு ஆராய்ச்சி நிறுவன இயக்குனரானார்; 2000ல், இந்திய அணுசக்தி ஆணைய தலைவர், அணுசக்தி துறை செயலர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார்.அணுக்கரு சார்ந்து, 250க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டார். 'புளூட்டோனியம், தோரியம்' உள்ளிட்ட தனிமங்களில் இருந்து அதிக ஆற்றலை பெறும் உத்திகளை கண்டறிந்தார். குறிப்பாக, தோரியத்தில் இருந்து, 75 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வழிமுறைகளை விளக்கி உள்ளார். கனநீர் அணு உலை வடிவமைப்பிலும் ஈடுபட்டார். அறிவியல் தொழில்நுட்ப கட்டமைப்புகள் சார்ந்த அரசு அமைப்புகளின் ஆலோசகராக உள்ள இவர், 'பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன்' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.பிரபல அணு விஞ்ஞானியின், 80வது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ