உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

ஜனவரி 14, 1918தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணிக்கு அருகில் உள்ள, முடப்புளிக்காடு கிராமத்தில் கருப்பையா தேவர் - வள்ளியம்மை தம்பதிக்கு மகனாக, 1918ல் இதே நாளில் பிறந்தவர் முத்தையா. மாடு மேய்ப்பது உள்ளிட்ட விவசாய வேலைகளை செய்துவிட்டு, பேராவூரணி, பட்டுக் கோட்டை ஜில்லா போர்டு பள்ளிகளுக்கு நடந்து சென்று படித்தார்.அப்போதே கள்ளுக்கடை மறியல், அன்னிய துணி புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டார். அண்ணாமலை பல்கலையில் பொருளாதாரம் படித்தார். பின், சென்னை வந்தார். ஜப்பான் விமானப்படை, செம்பரம்பாக்கத்தில் குண்டு வீசி ஏரியின் கரையை உடைத்தபோது, படகுகளால் மக்களை காத்தார்.மக்களுக்காக போராடி சிறை சென்றார். அங்கு கம்யூனிஸ்ட் தலைவர்களின் பேச்சை கேட்டு, 'மார்க்சிய போதனை' நுாலை வெளியிட்டதுடன், 'ஜனசக்தி, தீக்கதிர், செம்மலர்' பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றினார். பல நுால்களை எழுதிய இவர், 2003, ஜூன் 10ல் தன், 85வது வயதில் மறைந்தார்.'தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம்' துவங்கியவரின் பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ