உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

பிப்ரவரி 29, 1896 அப்போதைய பம்பாய் மாகாணம், தற்போதைய குஜராத் மாநிலத்தின், படெலி எனும் ஊரில், ரஞ்சோஜி நகார்ஜி தேசாய் - வாஜியாபென் தேசாய் தம்பதியின் மகனாக, 1896ல் இதே நாளில் பிறந்தவர், மொரார்ஜி தேசாய்.இவர், மும்பை வில்சன் கல்லுாரியில் படித்து, சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று, கோத்ராவின் உதவி கலெக்டராக பணியாற்றினார். அதை ராஜினாமா செய்து, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். 1934, 1937ல் நடந்த மாகாண தேர்தலில் வெற்றி பெற்று, மும்பையின் வருவாய், உள்துறை அமைச்சராக பணியாற்றி, முதல்வராகவும் ஆனார்.சுதந்திரத்துக்கு பின், நாட்டின் துணை பிரதமர், நிதியமைச்சர் பதவிகளை வகித்தார். 1977 தேர்தலில், ஜனதா கட்சியின் சார்பில் வெற்றி பெற்று, தன் 81வது வயதில் பிரதமரானார். இந்திராவின் நெருக்கடி நிலையை ரத்து செய்தார்.இந்தியாவை வளர்க்க, ரஷ்யா, அமெரிக்க நாடுகளின் உறவையும், அமைதிக்காக சீனா, பாகிஸ்தான் உறவையும் விரும்பினார். சாதாரண மக்களும் சாப்பிட 1 ரூபாய்க்கு, 'ஜனதா சாப்பாட்டை' ஹோட்டல்களில் அறிமுகம் செய்த இவர், 1995, ஏப்ரல் 10ல் தன், 99வது வயதில் மறைந்தார்.பிப்., 29ல் பிறந்ததால், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிறந்தநாள் கொண்டாடிய, 'தியாகி' பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை