உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தடை செய்யப்பட்ட பிட் புல் நாய் கடித்துக்குதறியது; சென்னையில் ஒருவர் உயிரிழப்பு

தடை செய்யப்பட்ட பிட் புல் நாய் கடித்துக்குதறியது; சென்னையில் ஒருவர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தடை செய்யப்பட்ட பிட்புல் ரக நாய் கடித்துக் குதறியதில் சென்னை குமரன் நகரில் ஒருவர் உயிரிழந்தார்.மத்திய அரசு கடந்தாண்டு மார்ச் மாதம் 23 ரக நாய்களை தடை செய்து உத்தரவிட்டது. இவற்றில் பிட் புல் ரக நாய்களும் அடக்கம்.இந்த நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை, மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை என்ற அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நாய்களை வளர்ப்பதற்கும், இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே வீட்டில் வளர்ப்பவர்களுக்கும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.இத்தகைய சூழ்நிலையில், சென்னை குமரன் நகரில் இன்று (19 ம் தேதி) மதியம் 3 மணிக்கு பிட் புல் ரக நாய், ஒருவரை கடித்துக் குதறிய சம்பவம் நடந்துள்ளது. நாயின் உரிமையாளரான பூங்கொடி என்ற பெண்ணையும் மீறி, கருணாகரன் என்பவரை தொடை, இடுப்பில் பிட்புல் ரக நாய் கடித்துக்குதறியது. இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தடுக்க முயற்சித்த உரிமையாளரான பூங்கொடியையும் அந்த நாய் கடித்தது. அவரும் கே.கே.நகர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் வெளியாகி வருகின்றன.இத்தகைய சூழலில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த இந்த சம்பவம் நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Paramasivam Ravindran
ஆக 20, 2025 12:14

தனியாக நடந்து செல்லும் குழந்தைகள் மட்டுமே இந்த நாய்களிடம் சிக்கி கடி படுகிறார்கள். நாய்களை பிடித்து கருத்தடை செய்து விட்டால் போதுமா? மீண்டும் அவை மனிதர்களை துரத்தி கடிக்கும். ஆகவே நாய்களை பிடித்து தனியாக கேம்பில் வைத்து , அவைகளின் இன பெருக்கத்தை குறைப்பதுதான் நல்ல வழி. மனித உயிர் , நாய்களின் உயிரை விட மேலானது என்பது எனது கருது.


எவர்கிங்
ஆக 20, 2025 09:20

கவனம் தேவை


லிங்கம்,கோவை
ஆக 20, 2025 05:21

இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட ஒன்றரை கோடி தெரு நாய் களை வளர்க்க சீன தனியார் நிறுவனங்கள் ஆர்வமாய் உள்ளன... இந்திய அரசு அனுமதி கொடுத்தால் அவர்கள் சொந்த செலவிலேயே அனைத்து நாய்களையும் பிடித்து சீன நாட்டிற்கு கொண்டு சென்று அன்புடன் வளர்ப்பர்... மத்திய அரசு இதனை பரிசீலிக்க வேண்டும்.


Mani . V
ஆக 20, 2025 05:09

அந்த ஓனர் உள்பட இரண்டு நாயையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும்.


சிட்டுக்குருவி
ஆக 20, 2025 04:05

நாய்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் நீரில் ஊதா நிறம் கலந்த நீரை கண்ணாடி பாட்டலில் அடைத்துவைத்தால் நாய்கள் ஓடிவிடுகின்றது என்று சிலதினங்களுக்குமுன் தினமலரிவந்தசெய்தி .பிளாஸ்டிக்கில் குழந்தைகள் விளையாடும் நீளமான பைபில் கலர் நீரிட்டு கடைகளில் விர்கின்றார்கள் .அதைவாங்கி அதில் நீலம்கலந்த நீரை ஊற்றி கைத்தடி மாதிரி வைத்துகொள்ளவேண்டும் .அப்போது நாய்கள் அவர்களை நெருங்காது .


jkrish
ஆக 20, 2025 01:39

guidelines உள்ளது, ஆனால் அதை நடைமுறை படுத்தும் பொறுப்பு நாயின் உரிமையாளருக்கும், அதிகாரிகளுக்கும் உள்ளதா?


Vijay D Ratnam
ஆக 19, 2025 22:38

இனி நாய் மேய்ப்போர் நாயை மேய்க்க வரும்போது நாய் சங்கிலியால் கட்டப்பட்டு இருக்கவேண்டும். நாய் அதிகபட்சம் ஓனர் கையிலிருந்து மூன்று மீட்டர் தூரம் வரை செல்ல மட்டுமே அனுமதி, நாயின் வாய் லெதர் பெல்ட்டால் Plastic Muzzle Bussal For Pet Dog Mouth with Leather Belt மூடப்பட்டு இருக்க வேண்டும். நாய் வளர்ப்போர் வெட்டரினரி ஹாஸ்பிடலில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை செக்கப் செய்து, தடுப்பூசி போட்ட சர்டிபிகேட் வைத்திருக்க வேண்டும். சிட்டியில் நாய் வைத்திருந்தால் மாநகராட்சிக்கு மாதம் 599 ரூபாய் வரி செலுத்த வேண்டும். டவுனில் வைத்திருந்தால் நகராட்சிக்கு மாதம் 399 ரூபாய் செலுத்த வேண்டும், பேரூராட்சி என்றால் மாதம் 299 ரூபாயும், ஊராட்சி என்றால் மாதம் 229 ரூபாயும் செலுத்த வேண்டும் என்று உத்தரவு போடுங்கள் யுவர் ஆனர். ஒரு நியாயம் வேணும்ல யுவர் ஆனர்.


Modisha
ஆக 19, 2025 21:45

மேலைநாடுகளில் கூட நாய் வளர்க்கிறார்கள் மிகுந்த கட்டுப்பாடுகளுடன் . இங்கே நாய் வளர்ப்பவர்களுக்கு எந்த பொறுப்பும் கிடையாது . மக்கள் மேல் பாயும், சாலையில் அசிங்கம் பண்ணும் . நாம் கண்டிக்க முடியாது .


ரங்ஸ்
ஆக 19, 2025 21:42

வளர்ப்பவரையே கடித்துள்ளது. ஐயோ பாவம். இனி மேல் அவர் வளர்ப்பாரா ? பட்டது போதும்டா சாமி என்று ஓடுவார்.


KRISHNAN R
ஆக 19, 2025 21:24

பாருங்க,, கோர்ட் சாட்டை சுழற்றும்,, ஆர்வலர் தடை வாங்குவார்... நிர்வாகம் முழிக்கும்.... கடைசியில்..... மக்கள் அவதி..... நடைமுறை சிக்கல் என்று முடிவுரை..... இதே தான் பாலிடிக்ஸ்


சமீபத்திய செய்தி