|  ADDED : ஜூலை 14, 2025 05:28 PM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
நாகை : படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் காட்சியின் போது ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ‛அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்ட பரம்பரை, தங்கலான்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பா. ரஞ்சித். தற்போது நடிகர் ஆர்யாவை வைத்து ‛வேட்டுவம்' என்ற படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார்.  ‛அட்டகத்தி' தினேஷ், சோபிதா துலிபாலா, லிஸி ஆண்டனி , கலையரசன், ஷபீர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். காரைக்குடியில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் நாகை மாவட்டம் விழுந்தமாவடி என்ற ஊரில் சண்டை காட்சிக்கான படப்பிடிப்பு நேற்று நடந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hajrwvu6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம், பூங்கண்டம் பகுதியை சேர்ந்த சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ், 52, என்பவர் காரில் தாவி செல்லும் காட்சி படம் பிடிக்கப்பட்டது. எதிர்பாராவிதமாக மோகன்ராஜ் தவறி விழுந்து படுகாயமடைந்தார்.  அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாகை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கீழையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில் பா.ரஞ்சித் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கவனக்குறைவு அல்லது அலட்சியத்தால் படப்பிடிப்பு நடத்தி ஒரு உயிர் போக காரணமாக இருந்ததாக கூறி அவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.