உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆளுக்கொரு வட்டம்; அரசியலில் அதுதானே சட்டம்!

ஆளுக்கொரு வட்டம்; அரசியலில் அதுதானே சட்டம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பாபா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க.,வினர், இப்போது ரஜினியை வைத்து படம் வெளியிடுவது, விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழக காங்., துணைத் தலைவர் ராம சுகந்தன்: அன்று ரஜினியின், பாபா படத்தை வெளியிட விடாமல், பா.ம.க.,வினர் பிரச்னை உண்டாக்கியபோது, ரஜினியை நானும், வன்னியர் சங்கத் தலைவர்கள் ஏ.கே.நடராஜன்,தீரன் போன்றவர்களும் சந்தித்து ஆதரவு அளித்தோம். இன்று, அதே ராமதாஸ் குடும்பத்தினர் ரஜினியை சந்தித்து, தங்களின் குடும்பம் தயாரிக்கும் படத்தை வெளியிட அழைத்துள்ளனர். வாழ்க்கை ஒரு வட்டம்.டவுட் தனபாலு: அது சரி... உங்க கட்சியை எதிர்த்துதான், தமிழகத்துல தி.மு.க.,வையே அண்ணாதுரை துவங்கினார். இப்ப, தி.மு.க.,வின் ஊதுகுழலாகவே உங்க கட்சி மாறிடுச்சே... இதுவும், வாழ்க்கை ஒரு வட்டத்துக்கு உதாரணம்தான் என்றால், 'டவுட்' இல்லாம ஏத்துக்குவீங்களா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

sankaranarayanan
டிச 12, 2024 12:34

இதெல்லாம் அரசியல் சகஜமப்பா கண்டுகொள்ளவே கூடாது பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது உண்மையாகிவிட்டதே


க.சி.இராமலிங்கம் சு.சின்னசாமிகவுண்டர்
டிச 12, 2024 11:42

தான் இருக்கின்றேன் காட்டும் இந்த அறிக்கை யார் இவர் எங்கே இருக்கிறார்


B N VISWANATHAN
டிச 12, 2024 11:01

அபாரமான பதில். காங்கிரசுக்கு உறைக்க போறது இல்லை. ஆனாலும் மண்டைல தட்டிக்கிட்டே இருக்கணும்


vadivelu
டிச 12, 2024 10:19

இந்த அரசியல் தலைகளுக்கு வெட்கம், மானம், சூடு சுரணை இருக்க கூடாதாம்


A Venkatachalam
டிச 12, 2024 10:13

படத்துல சிகரெட் தனி அடிக்கும் காட்சி இருந்தால் இளைனர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று போராட்டம் நடத்தினார்கள் இதில் என்ன தப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை