உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சு: தி.மு.க., மீது பாலகிருஷ்ணன் கொதிப்பு

அப்ப ஒரு பேச்சு, இப்ப ஒரு பேச்சு: தி.மு.க., மீது பாலகிருஷ்ணன் கொதிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகப்பட்டினம்: மா.கம்யூ., முன்னாள் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ளாட்சிகளின் பதவிக்காலம், கடந்த ஜன., 5ம் தேதியோடு முடிவடைந்து விட்டது. பதவிகள் முடிவற்ற 28 மாவட்டங்களிலும், உடன் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். பதவிக்காலம் முடிவடைந்தால், 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். கடந்த 2017 -- 2018ல், அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போட்டது. புதிய மாவட்டங்கள் பிரிப்பு, தொகுதி வரையறை என அ.தி.மு.க., காரணம் கூறியது. இதை எதிர்த்து, தி.மு.க., வழக்கு தொடர்ந்தது. 9 மாவட்டங்களுக்கு மட்டும் பின்னால் தேர்தல் நடத்தலாம்; மீதமுள்ள 28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 28 மாவட்டங்களில் இருக்கும் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தவில்லை. நகராட்சி, மாநகராட்சி வார்டு வரைமுறை நடக்கிறது என, தேர்தலை நடத்தாமைக்கு தி.மு.க., காரணம் கூறுகிறது.சட்டசபை தேர்தலுக்குப் பின்தான் உள்ளாட்சிக்கு தேர்தல் நடக்கும் நிலை உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தாமதத்தால், நிர்வாகத்தில் 50 சதவீதம் பெண்களுக்கு பதவி கிடைக்க வாய்ப்பில்லாமல் போகும். உள்ளாட்சியில் அதிகாரிகள் நிர்வாகத்தில், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும். ஊழலுக்கு தான் வழி வகுக்கும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Sankaran Natarajan
மே 23, 2025 15:15

பேக்கரி டீலிங் நடக்குது.


Rengaraj
மே 22, 2025 11:46

எங்கே தங்களுக்கு தோல்வி ஏற்படுமோ , சீட் பிரிப்பு பஞ்சாயத்தில் கூட்டணி கட்சிகளால் பிரச்சினை வருமோ என்று இந்த விஷயத்தில் திமுக பிரமாதமாக செயல்படுகிறது. தமிழ்நாடு தேர்தல் நடக்கிற வரை உள்ளாட்சி தேர்தல் இருக்காது. ஸ்டாலின் தட்டிக்கழிக்கவே பார்ப்பார். இதே எதிர்க்கட்சியாக இருந்தால் போராட்டம், வழக்கு என்று பிரச்சினையை பெரிதாக்குவார். அண்ணாதிமுக இதை விஷயத்தை கையில் எடுக்காமல் இருப்பதை பார்த்தால் , ரெண்டு கழகங்களுக்கு இடையே டீப் அண்டர்ஸ்டாண்டிங் இருப்பது போல் தோன்றுகிறது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 22, 2025 13:02

அதெல்லாம் இல்லை சார் தோல்வி பயம் தான். திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தோற்றால் அது வரும் சட்ட மன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்ற பயம். இதே அதிமுக அதிக இடங்களில் வென்று திமுக தோற்றால் அது ஆளும் திமுகவிற்கு மானம் பிரச்சனை. அதிமுகவிற்கு பூஸ்ட் சாப்பிட்டது போல் ஆகிவிடும். இவை இரண்டும் தவிர வேறு கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் பின்னர் அவர்கள் கேட்ட தொகுதிகள் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இரண்டு திராவிட கட்சிகளுக்கும் வரும். இதெல்லாம் தவிர இந்த தேர்தலில் பணம் கொடுக்க வேண்டும் பின்னர் சட்ட மன்ற தேர்தலிலும் பணம் கொடுக்க வேண்டும் இது இரண்டு திராவிட கட்சிகள் வேண்டாத சிலவு. நம் தமிழக ஆண்கள் பெண்கள் இளைஞர்கள் அனைவரும் கிடைத்தது இலாபம் என்று ஓட்டு போடும் பழக்கம் உள்ளவர்கள். இதற்கெதற்கு இரண்டு முறை பணம் கொடுக்க வேண்டும். அதனால் ஒரு மாநிலம் ஒரு தேர்தல் என்று வைத்துக் கொண்டு உள்ளார்கள். உள்ளாட்சி தேர்தல் தனியாக தானே நடக்கும் என்பது புரிகிறது. சட்ட சபை தேர்தல் முடிந்த கையோடு 2 அல்லது 3 மாதத்தில் தேர்தல் வைத்து மக்கள் சந்தோஷமாக இருக்கும் போது பிஸ்கட் கொஞ்சம் போட்டு தேர்தல் நடத்தி கொள்வார்கள். அதன் பின்னர் உள்ளூர் கான்ட்ராக்ட் பிரிப்பதில் பிரச்சினை இரு திராவிட கட்சிகளுக்கும் இருக்காது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்


R.P.Anand
மே 22, 2025 10:26

நீ எதிர் பார்கிறது கிடைக்கும்.


veeramani
மே 22, 2025 10:16

பாலக்ரிஷ்ணன் என்பவர் யார்??? கடந்த காலங்களில் இவருக்கு ஆளும் கட்சிக்கும் என்ன தொடர்பு?? சீனாவின் தொடர்புடைய கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கட்சியினை கை கழுவி விட்டதா?


Narayanan
மே 22, 2025 10:03

இவ்வளவு வருஷமா எங்கே இருந்தீங்க ? ஊழலுக்கு மொத்த சொந்தக்காரர்கள் திமுக என்று தெரிந்தே கூட்டணி வைத்து பணமும் பார்த்து கொத்தடிமைகளைவிட விட கேவலமாக இருந்துவிட்டு, திமுக எல்லாவற்றிலும் கட்டண உயர்வை கொண்டு பொதுமக்களை சுரண்டி பணம் பண்ணவிட்டுவிட்டு இப்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவை மிரட்ட இந்த நாடகமா ? வெட்கமாக இல்லை ? அப்போ தேர்தலுக்கு முன் மதுக்கடைகளை மூடுவோம் என்றார்கள் அப்படி செய்யவில்லை . இது நாள் வரை ஏன் கேள்வி கேட்கவில்லை ?


Rajarajan
மே 22, 2025 09:11

சரி புரியுது. பெட்டியை கட்டிக்கிட்டு எதிர் அணிக்கு போக போறீங்க. இல்லனா, ஸ்வீட் பாக்ஸ் அதிகம் வேண்டும், அதானே ??


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 22, 2025 09:06

ஓ, வாங்கித் தின்னது செரிச்சுப்போச்சோ? இது இப்பத்தான் உங்களுக்கு தெரியுதா தோழரே? அன்னிக்கும், இன்னிக்கும், என்னைக்கும் திமுக இப்படித்தான் ....


Ganapathi Amir
மே 22, 2025 09:02

ஆட்சியில் இருக்கும் அரசு அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவே முயற்சிக்கும்.. விதிகளை எல்லாம் இப்போதுள்ளவர்கள் மதிப்பதில்லை.. மக்களும் கேட்பதில்லை...


Yes your honor
மே 22, 2025 08:36

யோவ் எடுக்கறது பிச்சை, இதுல என்னா பெருசா கூவுற நீ. மூடிட்டு போவயா. அப்புறம் அடுத்த எலக்சன்ல, 2 ஸீட் தான், ஓகேவா. ஏதாவது பேசுனே சீட்டும் கிடைக்காது, பெட்டியும் கிடைக்காது, அப்புறம் மக்கள் நலக் கூட்டணியில் தான் போய் ஜாயிண்ட் ஆகணும்.


D Natarajan
மே 22, 2025 07:57

பெட்டி குறைந்து விடும். ஜாக்கிரதை


புதிய வீடியோ