உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடுதலாக 1,000 கோவில்களில் ஒரு கால பூஜை திட்டம்

கூடுதலாக 1,000 கோவில்களில் ஒரு கால பூஜை திட்டம்

சென்னை: கோவில்களுக்கான ஒரு கால பூஜை திட்டம், புதிதாக, 1,000 கோவில்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஒரு கால பூஜை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ஏற்கனவே, 17,000 கோவில்கள் இணைக்கப்பட்டுள்ளன.இவற்றுக்கான வைப்புத்தொகை, 2 லட்சம் ரூபாயில் இருந்து, 2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாண்டு 1,000 கோவில்களுக்கு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.இவற்றுக்கான மொத்த செலவினம், 110 கோடி ரூபாய். இது, அரசு நிதியாக வழங்கப்படுகிறது. இதற்கான காசோலையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார்.தமிழ்நாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காக, அதன் தலைமை நிதி அலுவலர் ஜமீலா காசோலையை பெற்றுக் கொண்டார்.புதிதாக 1,000 கோவில்களை, ஒரு கால பூஜை திட்டத்தில் இணைப்பதற்கு அடையாளமாக, அதற்கான அரசாணைகளை, 10 அர்ச்சகர்களிடம் முதல்வர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி