உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி, கல்லுாரிகளில் இருந்து 100 மீட்டருக்குள் 3 வகை கடைகளை மட்டும் அனுமதிக்கலாம்

பள்ளி, கல்லுாரிகளில் இருந்து 100 மீட்டருக்குள் 3 வகை கடைகளை மட்டும் அனுமதிக்கலாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க, சி.பி.ஐ., மற்றும் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்பு குழுவை, மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும்.'கல்வி நிறுவனங்களில் இருந்து, 100 மீட்டர் சுற்றளவுக்குள், எழுதுபொருள், மருந்து, உணவுப்பொருள் கடைகளைத் தவிர்த்து, வேறு எந்த கடைகளையும் அனுமதிக்கக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெண்ணுரிமை இயக்கம்

சென்னையில் குடிசைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, 'பெண்ணுரிமை இயக்கம்' சார்பில் தொடரப்பட்ட வழக்கில், துரைப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட நான்கு இடங்களில், மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. அங்கு, அடிப்படை வசதிகள் இல்லை என கூறப்பட்டது.மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நான்கு இடங்களிலும் உள்ள வசதிகள் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, அட்வகேட் கமிஷனரை நியமித்தது.அவர் ஆய்வு செய்து, தாக்கல் செய்த அறிக்கையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், அந்தப் பகுதிகளில் தாராளமாக கிடைப்பதாகவும், அங்கு போதை மறுவாழ்வு இல்லம் அமைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுஇருந்தது. இதையடுத்து, அட்வகேட் கமிஷனரின் அறிக்கையை அமல்படுத்துவது குறித்து, அரசிடம் கருத்து கேட்டு தெரிவிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஇருந்தது.இவ்வழக்கு, நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டி.ஜி.பி., தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:மாநிலத்தில் போதைப் பொருளை தடுக்க, ஏ.டி.ஜி.பி., இரண்டு ஐ.ஜி., மற்றும் மூன்று எஸ்.பி., தலைமையில், உயர் மட்ட சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ல் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட, 19 வெளிநாட்டவர்கள் உட்பட, 14,934 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 10,665 வழக்குகள் போடப்பட்டு உள்ளன.கடந்த 2023ல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட, 14,770 பேருக்கு எதிராக, 10,256 வழக்குகள்; கடந்த ஆகஸ்ட் வரை, 9,750 பேருக்கு எதிராக, 6,053 வழக்குகள் பதியப்பட்டு உள்ளன.

விழிப்புணர்வு

போதைப் பொருள் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டவர்கள், 2022ல் 645 பேர், 2023ல் 504 பேர், கடந்த ஆகஸ்ட் வரை 533 பேர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப் பொருளுக்கு எதிராக, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இடையே, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 'போதையில்லா தமிழ்நாடு' என்ற இணையதளம் சார்ந்த செயலி, துவக்கப்பட உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதை பார்த்த நீதிபதிகள், அண்டை மாநிலங்களில் இருந்து கூரியர் வாயிலாக, போதைப் பொருட்கள் தமிழகத்துக்குள் நுழைகின்றன. மாவட்டம், தாலுகா அளவில், போதைப் பொருட்கள் சர்வ சாதாரணமாக தொடர்ச்சி 13ம் பக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rangasamy
நவ 23, 2024 02:23

100மீட்டர் என்பது அதிகமில்லை.குறைந்தது௫௦௦மீட்டர் தூரத்திற்க்குள் இதுபோன்ற கடைகளை அனுமதிக்க கூடாது.500


RAMAKRISHNAN NATESAN
நவ 16, 2024 10:38

நீதிமன்றங்களை நம்பி கோடிக்கணக்கான ஏழைகள் மற்றும் நடுத்தர வருவாய்ப்பிரிவினர் காத்திருக்கும் நிலையில் இத்தகைய வழக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன ..... இத்தகைய வழக்குகளில் விசாரணையும் தடையின்றி தொடர்ந்து நடக்கிறது ..... தீர்ப்பும் அதிவிரைவில் கொடுக்கப்படுகிறது ...


Barakat Ali
நவ 16, 2024 09:46

அரசின் மிக உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கே போதை மருந்து கடத்தல் ஆசாமிகளுடன் தொடர்பிருந்தால், மாநிலக் காவல்துறைத் தலைவருக்கே தொடர்பிருந்தால் எந்த சட்டமும், எந்த உத்தரவும் பயன்தராது ..... அரசியல் சட்டத்தில் மாநில அரசுகளுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகாரம், சுதந்திரம் கொடுக்கப்பட்டு விட்டது ...


raja
நவ 16, 2024 08:42

இப்படி எல்லாம் தீர்ப்பு சொன்னால் எங்கள் திருட்டு திராவிட மாடல் அரசு கஞ்சா உள்ளிட்ட பொது பொருள்கள் உணவு வகையை சாரந்தது என்று சட்டம் இயற்றி விற்பார்கள் .. பரவா இல்லையா ..


pandit
நவ 16, 2024 07:30

அப்ப 101 மீட்டரில் திறப்பார்கள். கும்பகோணத்தில் டவுன் ஹைஸ் ஸ்கூல் அருகில் சினிமா தியேட்டர், டாஸ்மாக் உள்ளது


hari
நவ 16, 2024 07:11

coimbatore ondipudur area three schools within 200 road 300 meters 2 tasmac shops. it is not some one opened. govt is answerable.


Kasimani Baskaran
நவ 16, 2024 06:55

மாணவர்களுக்கு குடிப்பழக்கத்தை ஏற்படுத்தி விட்டால் திராவிட சாராய வியாபாரத்துக்கு என்றும் கவலையில்லை. அந்தத்தொழிலில் ஈடுபடுவோர் பரம்பரையாக செல்வச்செழிப்புடன் என்றும் சுகபோகமாக இருக்கலாம். முதல்படியாக கல்வியை அரை நூற்றாண்டுக்கு 100% நாசம் செய்து விட்டார்கள். அடுத்து போதை ஏற்றுவது. கஞ்சா அதில் முதல்படி. அடுத்து அபின் போன்ற மீள முடியாத போதை வஸ்துக்கள். அதையும் அயலக அணியை வைத்து செய்தார்கள் இன்னும் செய்கிறார்கள் என்று கேள்வி


அப்பாவி
நவ 16, 2024 06:12

அந்த மூணு கடைகளிலேயே போதை மருந்துகளை விற்பனை செய்வோமே. திருட்டு திராவிடங்களாச்சே. உதவாக்கரை சட்டங்கள் துணை இருக்கே.


Mani . V
நவ 16, 2024 05:44

இந்த மருந்துக்கடை அப்படிங்கிறது சோமபானக் கடையைத்தானே குறிக்கும் ஆபீஸர்ஸ்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை