உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திமுக அரசில் உருட்டு கடை அல்வாதான் கிடைக்கும்: இபிஎஸ் கிண்டல்

திமுக அரசில் உருட்டு கடை அல்வாதான் கிடைக்கும்: இபிஎஸ் கிண்டல்

சென்னை: திமுக அரசில் உருட்டு கடை அல்வாதான் கிடைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கிண்டல் செய்துள்ளார்.'திமுக ஆட்சி என்பது உருட்டுக்கடை அல்வா' என்று கூறி அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், சட்டசபை வளாகத்தில் அல்வா பாக்கெட் வெளியிட்டார். பின்னர் நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தும் மருந்து உற்பத்தியை அரசு கண்காணிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டது. இருமல் மருந்து விவகாரத்தில் தமிழக அரசு மிகுந்த அலட்சியமாக இருப்பதாக புகார் வந்துள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் ஏதோ ஏதோ சொல்கிறார். திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனை என்பதால் கிட்னி முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அரசின் அலட்சியத்தின் காரணமாக 25 குழந்தைகள் இறந்துள்ளனர். மருந்து நிறுவனம் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டும் 2024, 2025ல் அரசு சோதனை செய்யவில்லை. திமுக அரசில் உருட்டு கடை அல்வா தான் கிடைக்கும். 2021ம் ஆண்டில் தீபாவளியின் போது 525 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில் 10 சதவீத அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. எல்லாத்துக்கும் அல்வா கொடுத்துவிட்டார். இப்பொழுது நீங்கள் இந்த உருட்டு கடை அல்வா, எப்படி டேஸ்ட் ஆக இருக்கிறதா என்பதை சாப்பிட்டு பார்த்து சொல்லுங்கள். எந்த அளவுக்கு இந்த அரசு அல்வா கொடுத்து ஏமாற்றுகிறது என்பதை மக்கள் உணர வேண்டும். இவ்வாறு இபிஎஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

பாலாஜி
அக் 18, 2025 08:33

அல்வா வியாபாரத்தில் இறங்கி உள்ளார் எடப்பாடி பழனிசாமி


மணிமுருகன்
அக் 18, 2025 00:10

ஒரு மசோதாவைக் கூட சட்டப்படி நிறைவேற்றாமல் அவர்களே ஒருவரைமுறை வகுத்துக் கொண்டு மாநில சட்டசபையில் தான் சட்டம் இயறறப்படும் என்றி கூறிக்கொண்டு அதற்கு தேவையானநிதியை உச்சநீதிமன்றத்திற்கு தானம் செய்து கொண்டிருக்கும் வெங்காயக் கூட்டம் உருட்டு கடை அல்வா மட்டும அல்ல திருட்டு கொலையும் செய்யும ப ட்டிணத்தார் காயம் என்பது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்றார் உண்மை உடனே ஒரு பகுத்தறிவு முற்போக்கு பிறடபோக்கு மூடநம்பொக்கை ஈவெரா வெங்காயம் என்று ஒப்பாரி அாற்கு விளக்கம் உறிக்க ஒன்றுமில்லை எனறு இதுவும் அடித்தவரிடம் இருந்து திருடியது தான் அப்படி வெங்காயத்துலஇருந்து அயர்லாந்து வாரிசு திராவிட மாடல ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி திமுகா கூட்டணி பெருங்காய சிறுநீரகம் எப்படி திருடுகிறது ஒனறுமில்லாத வெங்காயத்திற்காக மருத்துவமனை சென்றார் ஸ்டாலின் திகா வகரயறாக்கள் ஆனால் அதற்கும அந்தக் காலத்தில் பல கருத்துக்கள் மக்கள் கொடுத்தார்கள் இப்படி பொய் சொல்லி பிழைப்பு நடத்துகிறது ஒரு ஒப்பாரி கூட்டம் இன்றுவரை


T.sthivinayagam
அக் 17, 2025 20:22

உருட்டு கடை அல்வா, பஞ்சு மிட்டாய் விற்பனை செய்பவர்கள் தான் பாஜக கூட்டணி முதல்வர் வேட்பாளரா. எம்ஜிஆர், ஜெயலலிதா அவர்கள் வளர்த்த கட்சி அல்வா விற்று பிரச்சாரம் செய்யும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார் இன்றைய பொதுச்செயலாளர்.


vivek
அக் 17, 2025 20:54

சிவநாயகம். இந்த் முடுக்கெல்லாம் வெள்ளி தட்டு வராது...வெறும் அலுமினிய தட்டு தான் உனக்கு


M.Sam
அக் 17, 2025 20:07

நீங்களும் சரி இந்த அணில் குஞ்சும் சரி இந்த பிஜேபி முதலாகிட்ட வசமா சிக்கிட்டீங்க ஒண்ணும் புடுங்க முடியாது ஒண்ணு அவனுக சொல்வதை கேக்கணும் இல்லாவிட்டால் நீங்களும் காலி அணில் கூட்டமும் காலி போங்க... நீக்களும் உங்க அரசியலும்...கூவம் பெட்டெர்...


sampath, k
அக் 17, 2025 19:05

EPS is unable to tolerate in failure to get the post of Chief Minister. For achieving his goal, he will compromise anything and with anybody.


திகழ்ஓவியன்
அக் 17, 2025 18:40

சம்பந்தியை மீட்போம் மகனை காப்போம் பிஜேபியிடம் சரணடைவோம்


திகழ்ஓவியன்
அக் 17, 2025 18:40

ஜெயலலிதா இறந்த பின்னர் ADMK என்னும் கடையை திருட்டு தனமாக அபகரித்து விட்டார் பழனி :: திருட்டு கடை பழனிசாமி


sundarsvpr
அக் 17, 2025 17:57

எந்த கடை அல்வா சாப்பிட்டாலும் இனிப்பு தான், இனிப்புடன் தான் சேர்க்கவில்லை சுவை வேறுபாடும். அரசியலில் தி மு க வை விரட்ட கூட்டு தேவை. சமையலில் இனிப்பை விட கூட்டு ருசியாய் இருக்கும். ஒரு சிங்கம் நாலு எழுதுகள் கதை நினைவில் கொள்வது நல்லது.


தமிழ் நாட்டு அறிவாளி
அக் 17, 2025 17:31

இன்னும் அப்டேட் ஆகாத எதிர்க்கட்சி தலைவர்.


ராமகிருஷ்ணன்
அக் 17, 2025 16:58

பரவாயில்லை, கிண்டல்கள் தொடரட்டும். பாட்டிலுக்கு 10 ரூபாய் பாட்டு மாதிரி அடி மட்ட லெவலுக்கு போற மாதிரி பாட்டு போடுங்க


சமீபத்திய செய்தி