உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநகராட்சியாகும் ஊட்டி; தயார் நிலையில் முன்மொழிவு; 510 உள்ளாட்சிகள் இணைப்பு!

மாநகராட்சியாகும் ஊட்டி; தயார் நிலையில் முன்மொழிவு; 510 உள்ளாட்சிகள் இணைப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் புதிய மாநகராட்சியாக ஊட்டி மாநகராட்சி உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் 510 உள்ளாட்சி அமைப்புகள், அருகேயுள்ள நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சியுடன் இணைத்து விரிவாக்கம் செய்ய அரசுக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதை முன்னிட்டு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. ஏற்கனவே இருக்கும் மாநகராட்சிகளுடன் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 236 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. ஏற்கனவே இருக்கும் நகராட்சிகளுடன் 13 பேரூராட்சிகள், 196 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. புதிதாக தோற்றுவிக்கப்படும் நகராட்சிகளுடன் 24 பேரூராட்சிகள், 24 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன.புதிதாக தோற்றுவிக்கப்படும் ஊட்டி மாநகராட்சியில், ஊட்டி நகராட்சி, கேத்தி பேரூராட்சி, தொட்டபெட்டா, நஞ்சநாடு, இத்தலார், உல்லத்தி ஆகிய 4 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. மொத்தம், 5 நகராட்சிகள், 45 பேரூராட்சிகள், 460 ஊராட்சிகள், அருகேயுள்ள உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட உள்ளன. ஸ்ரீபெரும்புதுார், மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், அவினாசி, பெருந்துறை, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு, போளூர், செங்கம், சேத்துப்பட்டு, அன்னுார், சூலுார், வேலுார், மோகனுார், வடக்கு வள்ளியூர், மண்ணச்சநல்லுார், அரூர், கள்ளக்குறிச்சி, திருவட்டாறு, குலசேகரம், உத்தமபாளையம், இளையான்குடி ஆகியவை புதிய நகராட்சிகளாக உருவாக்கப்பட உள்ளன.கோவை மாநகராட்சியுடன் மதுக்கரை நகராட்சி, இருகூர், பேரூர், பள்ளபாளையம், வெள்ளலுார் பேரூராட்சிகள், குருடம்பாளையம், சோமையம்பாளையம், பேரூர் செட்டிபாளையம், கீரணத்தம், நீலம்பூர், மயிலம்பட்டி, பட்டனம், வெள்ளானைப்பட்டி, கள்ளிபாளையம், சீரபாளையம் ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன.இதற்கான முன்மொழிவு அதிகாரிகளால் தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அரசு அதை ஏற்று, அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sathyanarayanan Sathyasekaren
செப் 29, 2024 22:20

இப்படி எந்த வசதிகளையும் செய்யாமல் பேச்சுக்கு தரம் உயர்த்துவது வரி ஏற்றுவதற்காகத்தான். கரூர் மாவட்டம் குளித்தலையை இப்படித்தான் எந்த ஒரு நகராட்சிக்குரிய வசதிகளை செய்யம்மாள் பேருக்கு நகராட்சிக்கியத்தில் மக்களுக்கு வீட்டு வரி, குப்பை வரி, தண்ணி வரி, பத்திரப்பதிவு கட்டணம் ஆகியவை அதிகமானது தான் மிச்சம், இன்றுவரை, பாதாள சாக்கடையோ, பேரூந்து நிலையம இல்லாமல் வரி மட்டும் கட்டுகிறோம்


அப்பாவி
செப் 29, 2024 18:07

பெரிய அளவில் நாறும்.


yts
செப் 29, 2024 16:47

, வீட்டு வரி முதல் அனைத்து வரிகளும் அதிகமாகவே


V. CHAKARAPANI
செப் 29, 2024 21:55

பெரியநாயக்கன்பாளையம் சிறப்பு நிலை பேரூராட்சி எதில் சேருகிறது.


ديفيد رافائيل
செப் 29, 2024 15:19

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுகின்றன இதுல என்ன புதுசு


KRISHNAN R
செப் 29, 2024 14:57

கடவுளே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை